13 பழனி தன்னை எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்திய கடிதத்தை மீண்டும் படித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது காளி அங்கே வந்தான். “என்ன பழனி உன் முகத்தில் இத்தனை பூரிப்பு, அந்தக் கடிதம் எங்கிருந்து வந்தது? மீண்டும் ஏதாவது போட்டியில் பரிசு கிடைத்திருக்கிறதா?” என்று கேட்டான் காளி. “பரிசுதான் கிடைத்திருக்கிறது. ஆனால் கதைப் போட்டியில்லை! கதைப்போட்டிப் பரிசைக் காட்டிலும் சிறந்த பரிசு இது. இத்தகைய கடிதம் ஒன்று வரும் என்று நான் நினைக்கவே இல்லை. காளி யாரிடமிருந்து வந்த கடிதம் தெரியுமா? கடிதத்தையே படிக்கிறேன் கேள்” என்று கூறி பழனி மகிழ்ச்சிப் பெருக்கில் மிதந்தவாறு கையிலிருந்த கடிதத்தைப் படித்தான். சுந்தரேசர் உயர்நிலைப்பள்ளி மாணவர் இலக்கிய மன்றம் - மதுரை |