பக்கம் எண் :

சிறுவர் நாவல்151

மார்க்கு பெற்றபோது அது பள்ளி நிர்வாகியின் மகன் என்பதால் கிடைத்தது
என்றான் நாகமாணிக்கம். பள்ளிக்கு வெளியில் எனக்குக் கிடைத்த புகழை
என் தந்தையின் புகழால் - பொருளால் கிடைத்தது என்றான் நாகமாணிக்கம்.
எனக்கே என்னிடம் ஒரு சந்தேகம் வந்துவிட்டது. நாகமாணிக்கம் சொன்னது
மெய்தானோ? சுந்தரேசர் மகன் என்பதைத் தவிர வேறு தகுதி
எனக்கில்லையா? இதைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். நான் யார் என்பது
தெரியாத இடத்தில் படித்து முதல் மார்க்குப் பெற வேண்டும்.
வெளியிடத்திலும் புகழ் பெறவேண்டும். இந்த லட்சியத்தோடு பெற்றோரின்
அனுமதியுடன் வீட்டைவிட்டுப் புறப்பட்டேன். பள்ளியில் முதல் மார்க்கு
வாங்குவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. வெளியிடத்தில்
காளித்தம்பியாகப் புகழ்பெற்றேன். என்னைச் சுய திறமையற்றவன் என்று
இகழ்ந்த நாகமாணிக்கமே என்னைப் புகழ்ந்து, பள்ளியில் பேச அழைக்கிறான்.
காளி என் லட்சியம் நிறைவேறியதாகத்தான் கருதுகிறேன். ஆனால் அதற்கு
நீதான் முக்கிய காரணம். உனக்கு என் நன்றி” என்றான்.


     “அது இருக்கட்டும். இந்த கடிதத்திற்கு என்ன பதில் எழுதப்
போகிறாய்?” என்று கேட்டான் காளி.


     “வருவதாக எழுதப் போகிறேன்” என்று பதில் சொன்னான் பழனி.


     “மதுரைக்குச் செல்கிறாய். பிறகு சென்னைக்கு வரமாட்டாயல்லவா?”


     காளி கேட்டபோது அவன் கண்கள் கலங்கின. பழனியின் கண்களும்
கலங்கின.


     “காளி, மதுரையில் என் பெற்றோருடன் தங்கிவிடுவேன். காளி
தயவுசெய்து நீ என்னுடன் வந்துவிடு. நீ என்னுடனேயே தங்கிவிடலாம்”


     “இல்லை பழனி. அது முடியாது எனக்கு என் வேலைகள் இருக்கின்றன.
அவற்றைச் செய்து வாழ்கிறேன்