“பெரியோர்களே, தாய்மார்களே, மாணவர்களே, விழாவில் சிறப்புரை ஆற்றவிருக்கும் பிரபல குழந்தை எழுத்தாளர் காளித்தம்பி இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையோடு இக்கூட்டத்தை ஆரம்பிக்கிறேன்” என்றார். உடனே கூட்டத்தில் கசமுச என்று சப்தம். மாணவர்களும் பிறரும் திரும்பிப் பார்த்தனர். தலைமை ஆசிரியர் ஒன்றும் புரியாமல் வாயிலைப் பார்த்தார். அங்கே அவரது மாணவன் பழனியும், அவனுடன் மாமல்லபுரத்தில் பார்த்தாரே அந்தச் சிறுவனும் கூட்டத்தின் மத்தியில் இருந்த வழியில் நடந்து மேடை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மாணவர்கள் “பழனி - பழனி” என்று கூச்சலிட்டார்கள். அழகன் “பழனி பழனி” என்று துள்ளினான். சுந்தரேசர் திரும்பிப் பார்த்தார். சந்தேகமேயில்லை, பழனிதான். அவர் கண்கள் மகனைப் பார்த்த பரவசத்தால் நீர் சொரிந்தன. நாகமாணிக்கம், பைத்தியக்காரனைப் போலப் பழனியைப் பார்த்தான். பழனியும் காளியும் மேடையை அடைந்தனர். பழனி தன்னிடமிருந்து காகிதத் துண்டை நாகமாணிக்கத்திடம் |