நீட்டினான். அதை வாங்கிப் பார்த்தான். பழனி (காளித்தம்பி) என்று எழுதியிருந்தது. நாகமாணிக்கத்திற்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது. பழனி கொடுத்த காகிதத்தைத் தலைமை ஆசிரியரிடம் நீட்டினான். அதை வாங்கிப் பார்த்த சங்கரலிங்கம் பெருமகிழ்ச்சி கொண்டார். உடனே பழனியை வரவேற்றார். மேடையில் மூன்று நாற்காலிகள் இருந்தன. ஒன்றில் உள்ளூர் தமிழ்ப் புலவர் விழாத்தலைவராக அமர்ந்திருந்தார். அவருக்கருகே பழனியை உட்கார வைத்தார். காளி கீழே மற்றவர்களுடன் அமர்ந்தான். சங்கரலிங்கம் புதிய உணர்ச்சியோடு, உவகையோடு பேசினார். “சபையோர்களே, பிரபல எழுத்தாளர் காளித்தம்பி வந்துவிட்டார். இங்கே அமர்ந்திருக்கும் இந்தப் பள்ளியின் மாணவனான பழனிதான் காளித்தம்பி” என்றபோது கூடியிருந்தோர் கைகொட்டி ஆரவாரம் செய்தனர். நாகமாணிக்கம் நிற்க முடியாமல் உட்கார்ந்து விட்டான். சுந்தரேசர் மகிழ்ச்சியால் நிலை கொள்ளாமல் தவித்தார். அழகன் துள்ளிக் குதித்தான். தலைமை ஆசிரியர் காளித்தம்பியை மாணவன் என்ற முறையிலும், எழுத்தாளர் என்ற முறையிலும் வரவேற்றார். தலைமை வகித்த தமிழ்ப் புலவர் காளித்தம்பியாகிய பழனியைப் போற்றினார். பிறகு பழனி காளித்தம்பி என்ற தகுதியில் எழுந்தான். உடனே, கடல் கொந்தளித்ததைப்போல ஆரவாரம். மலைகள் பொடி பட்டதைப் போலக் கைதட்டல் பழனி வசந்த காலத்து இளந்தென்றலைப் போலக் குளிரக் குளிரப் பேசினான்: “பெரியோர்களே, நண்பர்களே, என்னை உருவாக்கிய பள்ளியில் நான் பேச நிற்கிறேன். பள்ளிக்கும், இங்கு என்னை அழைத்த உங்கள் செயலாளர் நாகமாணிக்கத்திற்கும் நன்றி. நான் எதைப்பற்றிப் பேசவேண்டும் என்று கூறவில்லை நானாக ஒரு பொருள் எடுத்துக்கொண்டேன். அது ‘அழியாச் செல்வம்’. இந்த உலகம் அழியக் கூடியதாம். அழியப்போகும் |