விட்டார்கள். நான் ஒரு முறைகூட முதல் மார்க்கு எடுக்கவில்லை. அது மட்டுமல்ல. முன்பு இரண்டாவது மார்க்கு எடுத்தேன். இப்போது ஐந்தாவது, ஆறாவது ராங்க்தான் எடுக்கிறேன். உன் நண்பர்கள் என்னை அடக்கவே நன்றாகப் படித்து நல்ல மார்க்கு எடுத்தார்கள்” என்றான். இது பழனி எதிர்பார்க்காதது. “வகுப்பில் முதல் மார்க்கு எடுப்பது யார்?” என்று கேட்டான். நாகன் “உன் நண்பன் அழகன்” என்று சொன்னான். பழனி அழகனை மகிழ்ச்சியோடு பார்த்தான். அழகன் வெற்றியோடு புன்னகை செய்தான். ஆம், அழகன் நாகனைப் காட்டிலும் நன்கு உழைத்து முதல் மார்க் வாங்கவேண்டும் என்ற உறுதியோடு படித்தான். பழனியின் நண்பர்களோடு சேர்ந்து ஒன்றாக உழைத்துப் படித்தான். அவனும் பிறரும் வெற்றி பெற்றனர். சுந்தரேசர் மகனையும் காளியையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். பழனியின் தாய் மகனைப் பார்த்து மகிழ்ந்ததைக் காட்டிலும், மகன் புகழைக் கேட்டு அதிக மகிழ்ச்சி அடைந்தாள். பள்ளி விழாவிற்கு வந்த நிருபர்கள் வீட்டுக்கு வந்தனர். பழனியையும் காளியையும் பேட்டி கண்டனர். பெரிய பணக்காரர் பாசுவின் மகன் சைக்கிள் துடைத்து சம்பாதித்துப் படித்து, எழுதிப் புகழ்பெற்ற சுவையான கதை அவர்களைக் கவர்ந்தது. மறுநாள் பத்திரிகையில் பள்ளி விழாச் செய்தியோடு, காளி, பழனியின் படங்களோடு, அவர்களுடைய சுவையான கதையையும் முதல் பக்கத்திலே வெளியிட்டனர். அதைச் சென்னையிலே கண்ட தலைமையாசிரியர் தியாகராஜரும், அவர் மகள் திருநிலையும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். சாமி ஏஜென்ஸி உரிமையாளர் “என்னது, கோடீஸ்வரனின் மகனா என்னிடம் வேலை பார்த்தான்” என்று நினைக்கும்போதே நடுங்கினார். காளியின் முதலாளி, வந்துபோனவர்களிடமெல்லாம் செய்தித் தாளைக்காட்டி “நம்மகிட்டே இருந்தவன் சார் காளி. பழனியைக்கூட இங்கே |