பக்கம் எண் :

16காளித்தம்பியின் கதை

பூங்காக்கள் இருந்தன. பூங்காவின் இடையில் விண்ணைத்தொடும் உயரமான
மாளிகை. மாளிகையின் ஒரு பகுதி ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருந்தது.


     பழனி அந்த மாளிகைக்குள் நுழைந்தான். போர்டி கோவை அடுத்துப்
பெரிய வரவேற்பு அறை இருந்தது. அதற்குள் பழனியின் தந்தை- பாசு
ஆலையின் உரிமையாளர் உயர்திரு. சுந்தரேசர் ஒரு சோபாவில் சாய்ந்து
கொண்டிருந்தார். எதிரே இருந்த சோபாக்களில் சிலர் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் மதுரையில் உள்ள இளங்கோ இலக்கிய மன்றத்தைச் சார்ந்தவர்கள்,
மன்றத்தின் ஆண்டுவிழாவிற்காக நன்கொடை கேட்பதற்கு வந்திருந்தனர்.


     மன்றத் தலைவர் “தங்கள் மகன் வீட்டில் இல்லையா?” என்று கேட்டார்.
“இல்லை. வெளியே போயிருக்கிறான்” என்று சொன்ன சுந்தரேசரின் பார்வை
வரவேற்பு அறையின் வாயிலை அடைந்தது. பழனி வாயிலைக் கடந்து சென்று
கொண்டிருப்பதைக் கண்டார். உடனே “பழனி, பழனி” என்று அழைத்தார்.


     பழனி வரவேற்பு அறையின் வாயிலில் நின்று, “என்னப்பா?” என்று
கேட்டான். “சற்று உள்ளே வருகிறாயா?” என்று கேட்டார் சுந்தரேசர். பழனி
அறைக்குள் சென்றான். அப்பாவின் அருகிலே நின்றான். அப்பா உட்காரச்
சொல்லவே பழனி அவர் பக்கத்தில் உட்கார்ந்தான்.


     “பழனி, இவர்கள் இளங்கோ இலக்கிய மன்றத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர் மன்றத் தலைவர்” என்று மன்றத் தலைவரைச் சுட்டிக் காட்டினார்.


     பழனி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தான்.


     மன்றத் தலைவர், சுந்தரேசரிடம், “ஐயா, உங்கள் மகனின் அறிவும்
திறமையும் எங்களுக்குத் தெரியும். பழனி மிக நன்றாகப் பேசுகிறான்.
இவனால் தமிழ் இலக்கியம் பெருமை பெறப் போகிறது. இவனால் நம்
மதுரைக்கே பெரும் புகழ் வரப்போகிறது” என்று சொன்னார்.