பக்கம் எண் :

18காளித்தம்பியின் கதை

ஏதோ பேச்சுக்குச் சொல்லி வைத்தார். இவன் இப்படி மடக்குவான் என்று
எதிர் பார்க்கவில்லை. அதனால் அவர் திணறினார். திடீரென்று அவர்
ஒன்றை நினைத்துக் கொண்டார். சில மாதங்களுக்குமுன் பசுமலைத் தமிழ்ச்
சங்கத்திலிருந்து ஓர் அழைப்பிதழ் வந்தது. அதில் மாணவன் பா. சு. பழனி
பேசப் போவதாகக் குறித்திருந்தது. அதுதான் மன்றத் தலைவரின்
கவனத்துக்கு வந்தது. உடனே திகைப்பு மாறியது.


     “தம்பீ, பசுமலைத் தமிழ்ச் சங்கத்தில் நீ பேசவில்லையா? அதைக்
கேட்டேன். அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை” என்று
புளுகினார் மன்றத் தலைவர்.


     பழனியின் அடங்கிய கோபம் பீறிட்டு எழுந்தது. அவன் உதடுகள்
துடித்தன. சுந்தரேசரும் பிறரும் அவன் முகத்தைக் கண்டே ஓரளவு
கலங்கினர்.


     பழனி, “ஓகோ, அந்தப் பேச்சைக் கேட்டீர்களா? அதுதான் இளமையின்
துடிப்பும் புதுமையின் வேகமும் நிறைந்தது என் பேச்சு என்கிறீர்களா? சபாஷ்!
நீர்தான் சாட்சாத் அரிச்சந்திரன். மகாத்மா காந்தி உம்மிடம் வந்து உண்மை
எப்படிப் பேசவேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொல்லி
உரக்கச் சிரித்தான்.


     மன்றத் தலைவருக்கு ஒன்றுமே புரியவில்லை. சுந்தரேசர் மகனின்
இந்தப் புதிய போக்கைக் கண்டு வியந்தார். மற்றவர்களோ திகைப்புற்றனர்.


     பழனி தொடர்ந்து பேசினான்:


     “ஐயா மன்றத் தலைவரே, பொய்யும் புரட்டும் நெருங்காத பெருமை
பெற்றது இந்த மதுரை மாநகரம். நக்கீரர் என்ற புலவர் இங்கே வாழ்ந்தாராமே,
அவரைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே! கடவுளே எதிரே வந்து
நின்று தம் நெற்றிக்கண்ணைக் காட்டினார். அவரோ, “நெற்றிக் கண்ணைக்
காட்டினாலும் குற்றம் குற்றமே” என்று அஞ்சாது கூறினார். அப்படிப்பட்ட
மண்ணிலே, தமிழ் வளர்க்கும் மன்றத்திற்குத் தலைவராக இருக்கும் நீங்கள்
கேவலம் என்னையும் என்