பக்கம் எண் :

சிறுவர் நாவல்19

தந்தையையும் திருப்திபடுத்துவதற்காகப் பொய் சொல்லித் திரியலாமா?”

     பழனி கேட்டதும், மன்றத் தலைவர், “நானா? பொய் சொன்னேனா?”
என்று நாக்குழறக் கேட்டார்.


     பழனி உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தான். தன் கையால்
மன்றத் தலைவரைச் சுட்டிக் காட்டினான். “ஆமாம் ஐயா, நீங்களேதான்!
பசுமலையில் நான் பேசியதைக் கேட்டதாகச் சொல்கிறீர்களே, அதை நானும்
உண்மை என்றுதான் நம்பியிருப்பேன். ஆனால் பாருங்கள், அன்று எனக்குக்
காய்ச்சல் வந்து தொலைந்தது. அதனால் அந்தக் கூட்டத்திற்கே நான்
போகவில்லை” என்றான்.


     மற்றவர்கள் சிலை ஆனார்கள். மன்றத் தலைவரின் உடல்
வேர்வையால் நனைந்தது.


     “எதற்காக வீணே என்னைப் புகழ்கிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது
தேவையானால் கேளுங்கள். அதை என் தந்தை கொடுப்பார். அதற்காகப்
பொய்களைக் கொண்டு புகழத் தேவையில்லை” என்று மன்றத் தலைவரிடம்
கூறிவிட்டு அப்பாவின் பக்கம் திரும்பினான் பழனி. “அப்பா, இவர்களுக்கு
என்ன தேவையோ அதைக் கொடுத்தனுப்புங்கள்” என்று கூறிவிட்டுப் புயல்
வேகத்தில் அந்த இடத்தை விட்டுப் போனான்.


     தன்னுடைய அறையில் போய் உட்கார்ந்தான் பழனி. அவன் கண்களில்
நீர் துளிர்த்தது. “நாகமாணிக்கம் சொல்வது மெய்தான் போலிருக்கிறது. என்
பேச்சையே கேட்டறியாத அந்த மன்றத் தலைவர் என்னவெல்லாம்
அளந்தார்? ஏன்? சுந்தரேசரின் மகன் என்பதற்காகத்தானே? தந்தையின்
புகழால் தானா நான் புகழப்படுகிறேன்? எனக்கென்று தனிப்புகழ் இல்லையா?
நான் புகழற்றவனா? சூரியனிடம் பெற்ற இரவல் ஒளியில் பிரகாசிக்கிறது
சந்திரன். என் நிலையும் சந்திரனின் நிலைதானா?” என்று குழம்பினான்.


     “பழனி” என்ற குரல் கேட்டது. அன்பு ஆறாகப் பாயும் அந்தக் குரலை
கேட்டு நிமிர்ந்தான் பழனி. எதிரே பழனியின்