பக்கம் எண் :

2காளித்தம்பியின் கதை

அவனுடைய மனம் மட்டும் உயரப் பறந்தது. கோபுரத்தின் உச்சியைத் தொட்டு
மகிழ்ந்தது. பழனி அந்த மகிழ்ச்சியில் தன்னை மறந்தான்.


     பழனியுடன் அவனுடைய நண்பன் அழகன் வந்திருந்தான். அவன்
பழனியைப் பிடித்து உலுக்கினான். “பழனி உள்ளே போகவேண்டாமா?”
என்று கேட்டான். அதன் பிறகே பழனி கோபுரத்தைப் பார்ப்பதை
நிறுத்தினான். அழகனுடன் கோவிலுக்குள் நுழைந்தான்.


     மதுரையில் பணக்காரர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களில் மிகவும்
புகழ்பெற்றவர் பா.சுந்தரேசர். ‘பாசு’ என்ற இரண்டு எழுத்துக்களை
அறியாதவர்கள் அந்த மாவட்டத்திலே யாரும் இருக்கமாட்டார்கள்.
மதுரையில் இருக்கும் மிகப்பெரிய ‘பாசு’ ஆலைக்கு அவர்தான் உரிமையாளர்.
அது மட்டுமா? வேறு பல ஆலைகளிலும் அவர் பங்குதாரர். அவர் பணம்
எத்தனையோ துறைகளில் முடங்கியிருந்தது. அவருடைய ஒரே மகன் தான்
பழனி.


     பணம் இருப்பவர்களுக்குப் படிப்பு ஏறாது என்று
சொல்லுவார்களல்லவா? அதைப் பொய்யாக்கவே பிறந்தவன் பழனி. பழனி
படிப்பில் கெட்டிக்காரன். அறிவும் திறமையும் ஒருங்கே பெற்றவன். வகுப்பில்
என்றும் முதல் மார்க்கு வாங்குவான். எதிலும் முன்னணியில் நிற்பான்
விளையாட்டிலும் பழனி வல்லவன். குணத்தில் தங்கம். பணத்திமிர் இல்லாமல்
அனைவருடனும் பழகும் நல்ல பண்பு பெற்றவன். அவன் சுந்தரேசர்
உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்து வந்தான். சுந்தரேசர்
உயர்நிலைப் பள்ளியைத் தோற்றுவித்து நடத்தி வருபவர், பழனியின் தந்தை
தான்.


     அன்றுதான் ஆண்டுத் தேர்வு முடிந்தது. பழனியும் அழகனும்
கோவிலுக்குச் சென்றுவரலாம் என்று கிளம்பித் தான் கோவிலுக்குள்
நுழைந்தனர்.


     கோவில் எவ்வளவு சிறப்புப் பொருந்தியதோ அவ்வளவு சிறப்புமிக்கது
உள்ளே இருக்கும் பொற்றாமரைக்குளம். அதில்