பக்கம் எண் :

22காளித்தம்பியின் கதை

     பழனி சைக்கிளிலிருந்து இறங்கியவாறு, கண்ணை மூடிக்கொண்டு
சைக்கிளின் குறுக்கே வந்தவனைப் பார்த்தான். மறுநிமிடம், “அழகா அழகா”
என்று அலறினான். சைக்கிளை அப்படியே கீழே போட்டுவிட்டு அழகனிடம்
சென்றான்.


     அழகனின் சட்டை கிழிந்திருந்தது. நெற்றியிலிருந்து இரத்தம் கசிந்து
கொண்டிருந்தது. உடம்பெல்லாம் தூசி. அந்த நிலையில் அவனைப் பார்த்த
பழனி துடித்தான்.


     “அழகா, என்ன நடந்தது? ஏன் இந்த நிலை! சொல்! சொல்!” என்று
அழகனைப் பிடித்து உலுக்கிக் கேட்டான் பழனி.