3 சுந்தரேசர் உயர்நிலைப் பள்ளியின் முன்னால் அன்று மாணவர்கள் கூடிக் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தனர். எல்லோரும் பத்து மணி எப்போது ஆகும் என்று காத்துக் கிடந்தனர். மணி பத்தடித்தால் தான் ரிசல்ட் போர்டை மாணவர்கள் பார்வைக்கு வைப்பார்கள். மாணவர்கள் கூட்டம் கூட்டமாகப் பிரிந்து பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கூட்டத்தின் மத்தியில் நாகமாணிக்கம், ஏதோ பெரிய பேச்சாளனைப் போலக் கைகளை ஆட்டித் தலையை அசைத்துப் பேசிக்கொண்டிருந்தான். சற்றுத் தூரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அழகன். நாகன் பேசுவது தெளிவாகக் கேட்கவில்லை. ஆனால் பேச்சில் பழனியின் பெயர் அடிபடுவதை அறிந்தான். உடனே இருந்த இடத்திலிருந்து கொஞ்சம் நகர்ந்தான். நாகன் பேசுவது இப்போது அழகனுக்கு நன்றாகக் கேட்டது. “ரிசல்ட்டா? உம்...அதைப் போட்டுத்தான் தெரிந்து கொள்ளணுமா? இப்பவே கேள்! என் ரிசல்ட் எனக்குத் |