பக்கம் எண் :

24காளித்தம்பியின் கதை

தெரியும். நான் பாஸ்! அதிலே சந்தேகமே இல்லை. வகுப்பிலும் ரெண்டாவது
ராங்க் எனக்குத் தான். அதிலும் சந்தேகமில்லை” என்றான் நாகன்.


     உடனே ஒரு மாணவன் “அதென்ன, இப்படிச் சொல்லுகிறாய்? இந்த
வருடமாவது உனக்கு முதல் ராங்க் கிடைக்கலாம் என்று நான்
நினைக்கிறேன்” என்றான்.


     நாகன் அலட்சியமாகச் சிரித்தான். “பழனி இருக்கும் வரை முதல் ராங்க்
அவனுக்குத்தான். நான் என்னதான் படித்தாலும் எப்படித்தான் எழுதிக்
கிழித்தாலும் எனக்கு ரெண்டாவது மார்க்குத்தான். இந்தத் தடவையும் நான்
மிக நன்றாக எழுதியிருக்கிறேன். என்ன பயன்? பழனி, சுந்தரேசர்
மகனல்லவா” என்றான்.


     அழகனின் மனம் இதைக் கேட்டதும் புண்பட்டது. அதற்குள் ரிசல்ட்
போர்டைக் கொண்டுவந்து பள்ளியின் முன்னே ஒரு மரத்தில் சாய்த்து
வைத்தார்கள். மாணவர்கள் அனைவரும் அங்கே ஓடினர். நாகனும் சென்றான்.
அழகனும் போனான்.


     நாகன் தன் பெயரைப் பார்த்தான். அவன் பாஸ் ஆனால் முதல்
மார்க்குப் பழனிக்குத்தான். உடனே மற்றவர்களிடம், “பார்த்தீர்களா?
திருவாளர் சுந்தரேசரின் மகன் பழனிக்குத்தான் முதல் மார்க்கு. உம்,
எங்கப்பாவும் ஒரு பள்ளிக்கூடம் கட்டினால் நானும் வருஷம் தவறாமல் முதல்
மார்க்கு வாங்குவேன்” என்றான்.


     அழகனால் இதைப் பொறுக்க முடியவில்லை. அவன் “நாகா, போகிற
போக்கைப் பார்த்தால் சீக்கிரம் அந்த நிலை வந்தாலும் வரும். உன் அப்பா
வெறும் கிளார்க்காக இருந்தாலும், லஞ்சம் வாங்கியே ஒரு பள்ளிக்கூடம்
கட்டினாலும் கட்டுவார். அப்போது நீயே முதல் மார்க்கு வாங்கலாம்”
என்றான்.


     “ஏய் அழகா, எங்கப்பாவைப் பற்றி மேலே பேசினால் பல்லை
உடைச்சிடுவேன்” என்று கத்தினான் நாகன்.