மாறாக ஒரு தந்தையைப் பார்த்து இவர்தான் பள்ளியில் முதல்வனாக வரும் பையனின் தந்தை - இவர்தான் விளையாட்டில் சாம்பியன் பட்டம் பெறும் பையனின் தந்தை. இவர்தான் சமூக சேவை செய்து புகழ்பெறும் சாரணனின் தந்தை என்று சொல்ல வேண்டும். அதுதான் உண்மையில் அவன் புகழ் - அந்த மகன் புகழ்!” என்று சொன்னான். அழகன் அதை ஏற்றுக் கொள்கிறான் என்பதை அவன் முகத்திலிருந்தே தெரிந்துகொண்ட பழனி மேலே பேசினான். “எனக்குத் தெரிந்தவரை என்னை அறிமுகப்படுத்துபவர்கள் எல்லோரும் சுந்தரேசரின் மகன் என்று அறிமுகப்படுத்துகிறார்கள். உடனே எனக்குத் தனி மரியாதை! மதிப்பு! மதிப்பும் மரியாதையும் உண்மையில் எனக்கா? இல்லை. அவை என் அப்பாவின் புகழுக்கு; அவருடைய பொருளுக்கு! என் அப்பாவை அறிமுகப்படுத்தும் எவரும் ‘இவர் படிப்பில் கெட்டிக்காரனான பழனியின் தந்தை’ என்று சொல்லவில்லை.” பழனி சோர்வோடு சொன்னான். சற்றுப் பொறுத்து, “அழகா, என் ஆசை என்ன தெரியுமா? என் இலட்சியம் என்ன தெரியுமா? என் அப்பாவைக் காட்டி, ‘இவர் பழனியின் தந்தை என்று சொல்ல வேண்டும். கேட்பவர்கள் “பழனியின் தந்தையா!” என்று வியந்து அதனால் அவருக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று சொன்னான். “பழனி, அந்த நிலை நிச்சயம் வரும்! உன் புகழால் உன் தந்தை புகழடையும் காலம் நிச்சயம் வரும்” என்று சொன்னான், அழகன். “ஆனால் நாகனைப் போன்றவர்கள் என் புகழை அப்பாவின் புகழால் வந்தது என்று சொல்கிறார்கள். அதையும் போக்கப் போகிறேன். எப்படித் தெரியுமா” என்று கேட்டுவிட்டுச் சொன்னான். “அப்பாவின் புகழ் பரவாத ஒரு ஊருக்குச் செல்லப் போகிறேன். அங்கே ஏதாவது ஒரு பள்ளியில் சேர்ந்து படித்து முதல் மார்க்கு வாங்கப் போகிறேன். பாசு ஆலை உரிமையாளர் சுந்தரேசரின் மகன் என்று சொல்லிக் கொள்ளாமல் படித்துப் புகழ் பெறப் |