போகிறேன். இந்த வாரத்திற்குள் அந்த இலட்சியத்தை நிறைவேற்ற இந்த ஊரைவிட்டே போகப்போகிறேன். இது உண்மை - உறுதி - சத்தியம்.” பழனி உறுதியான குரலில் அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். அதற்குப் பதில் சொல்ல அழகன் வாயைத் திறக்கும் முன் “பழனி இதென்ன விபரீத முடிவு” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் சுந்தரேசர். சுந்தரேசரைக் கண்டதும் அழகன் எழுந்து வணங்கினான். “உட்கார் தம்பி” என்று அழகனை உட்காரச் சொல்லி அவரும் உட்கார்ந்தார். “பரீட்சையின் முடிவைக் கேட்கலாம் என்று வந்தேன். நீ ஏதோ பெரிய சபதம் செய்ததைக் கேட்க நேர்ந்தது. என்ன இதெல்லாம்?” என்று கேட்டார் சுந்தரேசர். “அப்பா நான் முதல் மார்க்கு வாங்குவது உங்கள் மகன் என்பதால்தான் என்று நாகமாணிக்கம் அனைவரிடமும் கூறி வருகிறான். அதை எப்படி மாற்றுவது? அது பொய் என்று சொன்னால் மட்டும் போதுமா? அப்பா, இந்த ஆண்டு நான் வேண்டுமென்றே சில கேள்விகளுக்குப் பதில் எழுதவில்லை. அப்படி இருந்தும் முதல் மார்க்கு எனக்குக் கிடைத்துள்ளது. அதனால், நாகன் பேசிய பேச்சைப் பொறுக்கமுடியாமல் அழகன் அவனோடு சண்டை போட்டிருக்கிறான். அவன் நெற்றியைப் பாருங்கள் என்றான் பழனி. சுந்தரேசர் அழகனின் நெற்றியைப் பார்த்தார். பிறகு பழனியைப் பார்த்தார். “அடுத்த ஆண்டு என்ன செய்வேன் தெரியுமா? நாகன் முதல்மார்க்கு வாங்கட்டும் என்று பரீட்சைக்குப் போய் எல்லாக் கேள்விகளுக்கும் தவறான பதிலை எழுதினாலும் எழுதுவேன். இது உங்களுக்குச் சம்மதமா? அப்பா, எனக்கும் திறமை இருக்கிறது, அறிவு இருக்கிறது என்பதை உலகத்துக்கு நிரூபிக்க, வேண்டும். அதற்காக ஒரு வருடம் என்னை என் இஷ்டப்படி போகவிடுங்கள். நான் எங்காவது படித்து என் புகழை நிலைநாட்டுகிறேன். தயவுசெய்து நான் எங்காவது |