பக்கம் எண் :

34காளித்தம்பியின் கதை

மதுரையிலிருந்து பிரித்து எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்றது.

     சுந்தரேசர் நிம்மதியுடன் வீட்டுக்கு வந்தார். ஆம், அவர் பழனி
புறப்படுகிறான் என்பதை அன்று மாலையே தந்தி மூலம் தன் கோவை
நண்பருக்குத் தெரிவித்திருந்தார். பழனி வந்து சேர்ந்ததும் தந்தி மூலம்
தெரிவிக்குமாறு கோரியிருந்தார்.


     மறுநாள்.


     சுந்தரேசர் தன் நண்பரின் தந்தியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
பிற்பகலில் தந்தி வந்தது. சுந்தரேசர் புன்னகையோடு அதைப் பிரித்தார்.
படித்தார்.


     “நீங்கள் சொன்ன வண்டியில் பழனி

     வரவில்லை. நன்றாகத் தேடிப் பார்த்தேன்.
     பழனியைக் காணோம். ஒருவேளை அவன்
     அந்த வண்டியில் புறப்படவில்லையோ?

                                    கிருஷ்ணன்”


     இதைப் படித்ததும் சுந்தரேசருக்கு அந்த அறையே சுழல்வதுபோல்
இருந்தது. பழனி கோவைக்குப் போக வில்லையா? அப்படியானால் அவன்
எங்கே? எங்கே போனான்?


     ஒன்றும் புரியாது திணறினார் சுந்தரேசர்.