5 “ஏன் பழனி அழுகிறாய்? எவனோ திருடிவிட்டுப் போனால் நீ எதற்காக அழவேண்டும்” என்று கேட்டான் காளி. பழனி பதில் சொல்லாமல் பத்திரிகையை மீண்டும் பிரித்துப் பார்த்தான். பழனியின் பார்வை திருட்டைப் பற்றிய செய்தியில் பதியவில்லை. அதற்குப் பக்கத்தில் இருந்த விளம்பரத்தில் பதிந்திருந்தது. காளி அதைக் கவனித்தான். அவனும் அந்த விளம்பரத்தைப் படித்தான். “அன்பு மகனே, உன் விருப்பப்படி செல்வதற்கு அனுமதித்தோம். ஆனால் எங்களிடம் சொன்ன படி கோயமுத்தூருக்குப் போகாமல் எங்கே சென்றாய் என்பது புரியவில்லை. நீ எங்கு வேண்டுமானாலும் இரு ஆனால் ஒரு கடிதம் எழுது. இல்லையென்றால் உன் தாயின் உள்ளம் |