பக்கம் எண் :

50காளித்தம்பியின் கதை

உயிரையும் தரத்தயங்கமாட்டாள். மகனோ நேர்மாறானவன். தாயிடம்
அவனுக்கு அன்பே இல்லை.


     மகன் ஒருநாள் நண்பர்களுடன் பேசிப் பொழுது போக்கிக்
கொண்டிருந்தான். மகன் பேச்சின் நடுவே “என்னால் செய்ய முடியாத
செயலே இல்லை” என்று சொன்னான். நண்பர்களில் ஒருவன், “எதைச்
சொன்னாலும் செய்வாயா? சரி! போய் உன்னுடைய தாயின் மார்பைப் பிளந்து
அவளுடைய இதயத்தைக் கொண்டுவா, பார்ப்போம்” என்றான்.


     மகன் சற்றும் யோசிக்காமல் கிளம்பினான். நேரே வீட்டுக்குப் போனான்.
மகனைக் கண்ட தாய் மகிழ்ச்சி அடைந்தாள். மகனோ “இவளை எப்படிக்
கொன்று இதயத்தை எடுப்பது?” என்று கவலைப்பட்டான். மகனின் முகத்தைப்
பார்த்த தாய், “ஏன் உன் முகத்தில் வாட்டம்?” என்று கேட்டாள். மகன்
ஒளிக்காமல் தன் கவலையின் காரணத்தைக் கூறினான்.


     தாய் கோபப்படவில்லை. “இதற்காகவா கவலைப்படுகிறாய்! உன்
வருத்தத்தைப் போக்க என் இதயம் பயன்படுமானால் எனக்கு மகிழ்ச்சிதான்.
மகனே உனக்கு வேண்டிய இதயத்தை எடுத்துச் செல்” என்றாள்.


     அந்த மகன் தாயைக் கொன்று அவள் இதயத்தைக் கையில் எடுத்துக்
கொண்டு நண்பரைத் தேடி வெற்றி வீரனாக ஓடினான்.”


     காளி கதையை நிறுத்தவில்லை. ஆனால் பழனி கண்ணில் நீர் துளிர்க்க,
“என்னது! தாயின் இதயத்தையா கொண்டு சென்றான்?” என்று குரல்
தழதழக்கக் கேட்டான்.


     “ஆமாம். மீதிக் கதையையும் கேள்” என்று சொல்லிக் கதையைத்
தொடர்ந்தான்.


     “நண்பன் சொன்ன காரியத்தைச் செய்தோம் என்று மகிழ்ச்சியில்
ஓடினான் மகன். வழியில் இருந்த வாழைப்பழத்தோல் ஒன்றின் மீது கால்
வைத்தான். உடனே சறுக்கி