பக்கம் எண் :

66காளித்தம்பியின் கதை

     “கவலைப்படாதே. என்னிடம் பணம் இருக்கிறது. அதைக்கொண்டு ஒரு
பழைய சைக்கிள் வாங்கிக் கொள்ளலாம்.


     “உன் பணத்திலா?”


     “என் பணத்தில்தான். என் பணத்தைக் கடனாகவே வாங்கிக்கொள்.
மாதம் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கொடு.”


     பழனி யோசித்தான். ஓட்டல் முன்பு சைக்கிளைத் துடைத்துப் பெறும்
காசு நிலையான வருவாயல்ல. ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு ரூபாய்கூடக்
கிடைக்கும். ஒருநாளைக்கு ஒரு ரூபாய் கிடைப்பதுகூடச் சிரமமாகிவிடும்.
பேப்பர் விநியோகிக்கும் இந்த வேலையில் நிரந்தரமான சம்பளம். அதுவும்
முப்பது ரூபாய் கிடைக்கும். காளி சொல்வதுபோல் அவனுடைய பணத்தில்
ஒரு சைக்கிள் வாங்கிக்கொள்ளலாம். மாதம் கொஞ்சம் கொஞ்சமாகத்
திருப்பிக் கொடுத்துவிடலாம்.


     பழனி ஒரு முடிவுக்கு வந்தான். “சரி காளி! நீ சொன்னபடியே
செய்வோம். பழைய சைக்கிள் ஒன்றை எனக்கு வாங்கிக்கொடு” என்றான்
பழனி.


     காளி அந்த விநாடி முதல் பழைய சைக்கிள் விலைக்குக் கிடைக்குமா
என்று தேடித் திரிந்தான். தனக்குத் தெரிந்தவர் களிடமெல்லாம் சொல்லி
வைத்தான். இருநூறு இருநூற்றைம்பது ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்த
சில சைக்கிள்களைப் பார்த்தான் காளி. பழனி அவை வேண்டாம் என்று
சொல்லி விட்டான்.


     “காளி, இவ்வளவு கடன்பட்டால் நான் அதை எப்போது தீர்ப்பது?
குறைந்த விலையில் ஒரு சைக்கிள் பார். இது மிகப் பழைய சைக்கிளாக
இருந்தாலும் பரவாயில்லை” என்றான் பழனி.


     காளி பழனியின் விருப்பப்படி தேடினான். ஐந்தாவது நாள் விலை
குறைந்த சைக்கிள் ஒன்றைக் கண்டுபிடித்தான். விலை நூற்றைம்பது ரூபாய்
என்றார்கள். காளி அவர்களிடம்