பக்கம் எண் :

71

                               7

     கையிலே தோல்பையுடன் நின்ற பழனி என்ன செய்வதென்று
தெரியாமல் திகைத்தான். மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும்
இல்லை - மேலும் அங்கேயே நிற்க விரும்பவில்லை. தோல்பையை
எடுத்துக்கொண்டு சைக்கிளில் புறப்பட்டான். பெரிய மேட்டிலிருந்து
சூளைக்குச் சென்றான். தன் அறையில் தோல் பையை வைத்தான். காளியின்
வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.


     காளி வந்தான். காளியிடம் பழனி விஷயத்தைச் சொன்னான். தனக்கு
வழியில் கிடைத்த தோல்பையைக் காட்டினான். காளி தோல் பையைத்
திறந்தான் “அம்மாடி, எவ்வளவு பணம்” என்று வாயைப் பிளந்தான்.


     “பழனி நீ என்ன செய்ய முடிவு செய்திருக்கிறாய் அதைச் சொல்லு”
என்று கேட்டான் காளி.


     பழனிக்கு அந்த நிலையில் பணம் தேவை. பள்ளியில் சேரவும், பாட
புத்தகங்கள் வாங்கவும் பணம் நிச்சயம் வேண்டும். அதிர்ஷ்டம் அவனைத்
தேடி வந்திருக்கிறது. கொடுக்கிற தெய்வம் அவன் காலடியில் கொண்டு வந்து