இருவரையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு பழனி கண்டெடுத்த பையை முஸ்லீமிடம் கொடுத்தார். “இதுதான் உங்கள் பையா” என்று கேட்டார். முஸ்லீம், “ஆமாம் ஆமாம், இதுவேதான் என் பை” என்று கூறிக்கொண்டே அதைப் பறித்துக் கொண்டார். “கடையை மூடிக்கொண்டு பையையும் ஒரு பத்திரிகையையும் கக்கத்தில் வைத்துக்கொண்டு போனேன். பாதிவழி நடந்து வந்து பார்த்தால் பத்திரிகைதான் இருந்தது. பையைக் காணோம்” என்றார் முஸ்லீம். “இவன்தான் பழனி. இவன்தான் உங்கள் பையைக் கண்டெடுத்தான். இவன் இவனுடைய நண்பன்” என்று சொல்லிவிட்டு “பையில் நீங்கள் வைத்த பணம் மற்றப் பொருள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்” என்றார் இன்ஸ்பெக்டர். முஸ்லீம் பையிலிருந்தவற்றை வெளியே எடுத்துப் பார்த்தார். நோட்டுக்கட்டுகளை எண்ணிப் பார்த்தார். பிறகு “இன்ஸ்பெக்டர் சார் ஐம்பதாயிரம் ரூபாய் அப்படியே இருக்கிறது. எதுவும் குறையவில்லை. பையை நான் எடுத்துச் செல்லட்டுமா?” என்று கேட்டார். இன்ஸ்பெக்டர் “பொறுங்கள்! கொஞ்சம் சடங்கு இருக்கிறது. அதை முடிக்கவேண்டும். பிறகு நீங்கள் கையெழுத்துப் போட்டுவிட்டு எடுத்துச் செல்லலாம்” என்று சொன்னார். பிறகு “பழனி பையைக் கண்டுபிடித்ததும் போலீஸில் கொண்டு வந்து கொடுத்தாய். உனக்கு என் பாராட்டுகள். காளி உனக்கும் என் பாராட்டு உரியது. பழனிக்கு இந்த நல்ல வழியைக் காட்டினாயல்லவா? இனி நீங்கள் போகலாம்” என்றார். காளியும் பழனியும் இன்ஸ்பெக்டருக்கு வணக்கம் தெரிவித்துப் புறப்பட்டனர். அதற்குள் முஸ்லீம் “கொஞ்சம் இருங்கள்” என்றார். தன் சட்டைப் பையிலிருந்த பர்ஸை எடுத்தார். அதிலிருந்த பணத்தில் இரு நூறுரூபாயைத் தனியே எடுத்து இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார். “சார் இந்த ரூபாயை |