பக்கம் எண் :

சிறுவர் நாவல்75

உங்கள் கையால் பழனியிடம் கொடுங்கள். பணப்பையைக் கண்டெடுத்துத்
தந்ததற்கு நான் தரும் சிறு பரிசு இது” என்றார்.


     இன்ஸ்பெக்டர் பணத்தைப் பழனியிடம் நீட்டினார். பழனி தயங்கி
நின்றான்.


     “வாங்கிக்கொள் தம்பி. இதில் ஒன்றும் தவறில்லை. பிறர் பொருளை
எடுத்துக்கொள்வதுதான் தவறு. பரிசு பெறுவது தவறல்ல. உம்...இந்தப் பரிசைப்
பெற்றுக்கொள்” என்றார் வேப்பேரி இன்ஸ்பெக்டர்.


     பழனி அதைப் பெற்றுக்கொண்டான். பரிசு கொடுத்த முஸ்லீமுக்குத்
தன் நன்றியைத் தெரிவித்தான். பின்னர் காளியுடன் வீட்டுக்குச் சென்றான்.


     பழனி காளி இருவரும் அன்று மிக மகிழ்ச்சியாகத் தூங்கினார்கள்.
பிறருக்கு உதவும்போது உண்டாகிற மகிழ்ச்சியைக் காட்டிலும் சிறந்த மகிழ்ச்சி
எதுவும் இல்லை என்பதை இருவரும் அன்று நன்கு உணர்ந்தார்கள்.


     மறுநாள் காலை காளி வேலைக்குப் போய்விட்டான். அதற்குப் பிறகு
பழனி ஓட்டலுக்கருகே சைக்கிள்களைத் துடைக்கும் வேலையைப் பார்க்கப்
புறப்பட்டான். காளி வேலை செய்யும் பத்திரிகைக் கடைக்கு அப்பால்தான்
ஓட்டல் இருந்தது. பழனி பத்திரிகைக் கடையைக் கடக்கும்போது “பழனி”
என்ற குரல் கேட்டது. பத்திரிகைக் கடை முதலாளி தான் அழைத்தார்.
அவருக்குப் பழனியை நன்றாகத் தெரியும்.


     பழனி கடையருகே சென்றான். “என்னங்க” என்று கேட்டான்.


     “பழனி, காளி எல்லாம் சொன்னான். ஐம்பதாயிரம் ரூபாயைத் திருப்பிக்
கொடுத்தாயாமே. நீயும் தங்கம்! காளியும் தங்கம்! இனம் இனத்தோடு என்று
சொல்லுவாங்களே, அது பொய்யா? இரண்டு பேரும் எப்பவும் ஒற்றுமையா
இருக்கவேண்டும். அதுதான் எனக்கு வேண்டியது. பத்திரிகை