பக்கம் எண் :

80காளித்தம்பியின் கதை

இருக்கும்? பழனியைக் காட்டிலும் நான் நன்றாக எழுதுகிறேன். என்றாலும்
எனக்கு ஏன் முதல் மார்க்குக் கிடைப்பதில்லை.”


     அழகன் அதற்கு மேல் நாகனின் பேச்சைக் கேட்க விரும்பவில்லை.


     “நாகா, மற்றவரிடம் சொல்லும் கதையை என்னிடம் சொல்லாதே. உன்
திறமையும் அறிவும் எனக்குத் தெரியும். இதை இந்த வருடம் மற்றவர்களும்
தெரிந்து கொள்வார்கள். நாகா, பழனி இந்தப் பள்ளியில் இந்த வருடம்
படிக்கப் போவதில்லை. நீ உன் சூரத்தனத்தைக் காட்டி முதல் மார்க்கு வாங்கு
பார்க்கலாம்.” என்றான் அழகன்.


     “என்ன! பழனி இந்தப் பள்ளியில் படிக்கப் போவதில்லையா?”
வியப்போடு கேட்டான் நாகன்.


     “ஆமாம் நாகா ஆமாம். நீ கெட்டிக்காரனாயிற்றே! மிக நன்றாகப்
பரீட்சை எழுதுவாயே. உன்னால் முடிந்தால், உனக்கு உண்மையிலேயே
திறமை இருந்தால் முதல் மார்க் வாங்கு” என்று கூறிவிட்டு அழகன்
அங்கிருந்து சென்றான்.


     நாகன் சிலைபோல நின்றான். “பழனி இந்தப் பள்ளியில் படிக்கப்
போவதில்லையா? என்ன அதிசயம்! ஏன் படிக்கப் போவதில்லை? எங்கே
படிக்கப் போகிறான்?” நாகன் கையிலிருக்கும் ஐஸ்புரூட் கரைவதையும்
கவனிக்காமல் சிந்தனையில் ஆழ்ந்தான்.


     அழகன் நேரே வாசகசாலை ஒன்றுக்குச் சென்றான். கொஞ்சநேரம்
பத்திரிகைகளைப் புரட்டினான். விளக்கு வைக்கும் நேரம். மாலைப்
பத்திரிகைகள் வந்தன. அழகன் அவற்றைப் புரட்டினான். அதில் ஒரு செய்தி
அவன் கவனத்தைக் கவர்ந்தது.


     அது ஐம்பதாயிரம் ரூபாய் அடங்கிய பையை சிறுவன் போலீஸில்
ஒப்படைத்த செய்திதான். அதில் ஒப்படைத்த சிறுவன் பெயர் பழனி என்று
இருப்பதைப் பார்த்தான். “யார் இந்தப் பழனி; நம் பழனியின் கடிதம்
திருச்சியிலிருந்தல்லவா