பக்கம் எண் :

88காளித்தம்பியின் கதை

வைத்துக்கொண்டு ஒரு வழியாகச் சாப்பாட்டுக் கவலையையும் தீர்த்து
விடலாம்” என்றான்.


     “பள்ளிக்கூடத்தில் சேர்ந்த பிறகும் சைக்கிள் துடைக்கப் போகிறாயா?”


     “ஆமாம். அதில் என்ன இழிவு? அதுவும் ஒரு வேலை தானே.
காலையில் ஒரு மணிநேரம், மாலையில் கொஞ்ச நேரம். அவ்வளவுதான்.
மாலை ஐந்து மணிக்கு பேப்பர் போடப் போய்விடுவேன். இதில் எதையும்
விடப்போவதில்லை. காளி, நாளைக்கு முதலில் அந்தப் பள்ளிக்கூடத்துக்குப்
போய் ஒரு அப்ளிகேஷன் பாரம் வாங்கி வரவேண்டும்” என்றான் பழனி.


     “ஓ போகலாம், அதற்குமுன் ஹெட்மாஸ்டரைப் பார்க்கலாம். காலையில்
பேப்பர் போடப்போகும்போது நீயும் கூடவருகிறாயா?”


     “ஓ வருகிறேன்.”


     மறுநாள் காலை காளி, பழனியை அந்தத் தலைமையாசிரியர் வீட்டுக்கு
அழைத்துச் சென்றான். பழனியை அறிமுகப்படுத்தினான். அவர், “பழனி, காளி
உன்னைப் பற்றிச் சொன்னான். வேலை செய்து கொண்டே, பள்ளியில் படிக்க
முடியுமா? எங்கள் பள்ளியில் ஒரு முறை பெயில் ஆனால் அவர்களைப்
பள்ளியிலிருந்து நீக்கி விடுவது வழக்கம்”


     “வேலை செய்துகொண்டே படிக்க முடியும் என்று நம்புகிறேன் சார்”
என்றான் பழனி.


     “உம், நீ எந்த வகுப்பில் சேரவேண்டும்!”


     “ஒன்பதாம் வகுப்பில் சார்”


     “ஒன்பதாம் வகுப்பில், சேரவேண்டுமா? அதில் மூன்று பேருக்குத்தான்
இடம் இருக்கிறது. இதுவரை சுமார் இருபது பேர்கள் விண்ணப்பம்
செய்திருக்கிறார்கள். நீயும் விண்ணப்பம் செய்! நாங்கள் ஒரு தேர்வு
வைப்போம். அதில் அதிக மார்க்கு வாங்கும் முதல் மூன்று பேரைச் சேர்த்துக்