காற்றாய்ப் பறந்து வருவதாகக் கூறிவிட்டு ஓட்டமாய் ஓடிய காளி, ஏன் இன்னும் வரவில்லை? “ஒருவேளை... ஒருவேளை.... எனக்குப் பள்ளியில் இடம் கிடைக்க வில்லையோ?” இதை நினைக்கும்போதே தன் இதயம் வெடித்துச் சிதறுவதைப்போல வேதனைப்பட்டான் பழனி.