பக்கம் எண் :

94

                              9

     பழனியின் வேதனை விநாடிக்கு விநாடி அதிகமாகிக் கொண்டிருந்தது.
பொறுமை இழந்த பழனி, பள்ளிக்கே போய்ப் பார்க்கக் கிளம்பினான்.
அப்போதுதான் காளி வந்து சேர்ந்தான்.


     “காளி, காளி, எனக்குப் பள்ளியில் இடம் கிடைத்ததா?” என்று
அச்சமும் அவசரமும் போட்டியிடக் கேட்டான்.


     காளி அறையில் உட்கார்ந்தான்.


     “பழனி இப்படி வா. எங்கே உன் வாயைத் திற, பார்க்கலாம்”


     பழனி காளியின் அருகே சென்றான். “உம் சீக்கிரம் வாயைத் திற”
என்றான் காளி. பழனி வாய் திறந்தான். காளி தன்னிடம் இருந்த கல்கண்டை
அவன் வாயில் போட்டான். பழனியின் வாய் இனித்தது. மனம்
இனிக்கவில்லையே?