அறிமுகமும் அமைப்பும்

உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனத்திற்கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் 1999இல் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (த.இ.ப.) ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார். அதை நிறைவேற்றும் வகையில் இத்தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. த.இ.க.ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது. இது தற்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  த.இ.கவின் ஆட்சிமுறை அமைப்பு (படம் 01)
    பொதுக் குழு
    இயக்குநர் குழுமக் குழு
    கல்விப் பேரவைக் குழு
    நூலகக் குழு
    கைப்பேசி வல்லுநர் குழு
    ஆலோசனை நிலைக் குழு
    ஒருங்குறி உயர்மட்டக் குழு
    தகவலாற்றுப்படைக் குழு
     
    த.இ.க. மேனாள் தலைவர்
    த.இ.க. மேனாள் இயக்குநர்கள்

த.இ.க. பணித்திட்டங்கள்

த.இ.க. வின் பணித்திட்டம் பல்வகைப்பட்டவை. இணையவழிக் கல்வித்திட்டங்கள், மின் நூலகம், கணித்தமிழ் வளர்ச்சி, பலவற்றைக் கொண்டுள்ளது (படம் 02).