4.4 ஒற்றளபெடை

உயிர் எழுத்துகள் அளபெடுப்பது போலவே மெய் எழுத்துகளும் அளபெடுக்கும். மெய் எழுத்து அளபெடுக்கும்போது, அதற்கு அடையாளமாக, அதே மெய் எழுத்து எழுதப்படும். ங், ஞ். ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்து மெய்எழுத்துகளும் ஆய்த எழுத்தும் அளபெடுக்கும். ஒரு மெய்எழுத்து அரை மாத்திரை நேரம் ஒலிக்கும் என்று கூறப்பட்டது. மெய்எழுத்து அளபெடுக்கும்போது இரண்டு மெய்எழுத்துகள் வருவதால், இரண்டும் சேர்ந்து ஒரு மாத்திரை நேரம் ஒலிக்கும்.

வணங்ங்கினான்.
மன்ன்னன்

ங, ஞ. ண, ந, ம, ன, வ, ய, ல, ள, ஆய்தம்
அளபு ஆம், குறில் இணை, குறில் கீழ், இடை, கடை
மிகலே அவற்றின் குறி ஆம் வேறே

(நன்னூல் 92)

(பொருள்: செய்யுளில் ஓசை குறையும்போது, குறில் எழுத்தை அடுத்தும், தொடர்ந்து வரும் இரண்டு குறில் எழுத்துகளை அடுத்தும், சொல்லின் இடையிலும் இறுதியிலும் ங், ஞ், ண், ந்,ம், ன், வ், ய், ல், ள் ஆகிய மெய் எழுத்துகளும் ஆய்த எழுத்தும் நீண்டு ஒலிக்கும். அளபெடுப்பதற்கு அடையாளமாக அதே மெய்எழுத்து எழுதப்படும்.)

பெயர்:
ஒற்றளபெடை
எழுத்துகள்:
ங், ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள், ஃ
வரும் இடம்:
ஒரு குறில் எழுத்து இரு குறில் எழுத்து}இவற்றுக்குப் பிறகு
சொல்லின்
முதல்
இடை
இறுதி
} ஆகிய இடங்களில் அளபெடுக்கும்
அடையாளம்:
அதே எழுத்து மீண்டும் எழுதப்படும்.


தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.

உயிர்மெய் எழுத்தில் உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் எவ்வாறு இடம்பெற்றுள்ளன?

விடை
2. அளபெடை என்றால் என்ன? விடை
3. உயிரளபெடை எத்தனை மாத்திரை பெறும்? விடை
4. உயிரளபெடையின் வகைகள் யாவை? விடை
5. ஒற்றளபெடையை விளக்குக. விடை