6.5 தொகுப்புரை

அன்புடையவர்களே, இந்தப் பாடத்தில் தொடக்க காலப் புதின ஆசிரியர்களுள் புகழ்பெற்ற ஜே.ஆர்.ரங்கராஜு எழுதிய புதினங்கள் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். துப்பறியும் புதினம் என்னும் வகையைச் சார்ந்த பொழுதுபோக்கு நாவல்களைப் படைப்பதில் அவர் திறமை பெற்றிருந்தார் என்று அறிந்தீர்கள். அவர் படைத்த மிகப் புகழ் பெற்ற புதினமான மோஹன சுந்தரம் பற்றி விரிவாகத் தெரிந்து கொண்டீர்கள். புதினத்தின் பல்வேறு சிறப்புகளையும், எழுத்தாளரின் திறன்களையும் புரிந்து கொண்டீர்கள்.

தன்மதிப்பீடு : வினாக்கள்- II

1
கதைத் தலைப்பு எவ்வாறு இருத்தல் வேண்டும்? விடை
2

பொழுதுபோக்கு நாவலில் காணப்படும் கதைக்கரு யாது?

விடை
3

பின்நோக்கு உத்தி என்றால் என்ன?

விடை
4

ஆசிரியர் மொழிநடை குறித்து எழுதுக.

விடை