முகப்பு |
ஒக்கூர் மாசாத்தியார் |
126. முல்லை |
'இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர் |
||
இவணும் வாரார்; எவணரோ?' என, |
||
பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத் |
||
தொகு முகை இலங்கு எயிறு ஆக |
||
நகுமே-தோழி!-நறுந் தண் காரே. |
உரை | |
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தி |
139. மருதம் |
மனை உறை கோழி குறுங் கால் பேடை, |
||
வேலி வெருகினம் மாலை உற்றென, |
||
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய |
||
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு |
||
இன்னாது இசைக்கும் அம்பலொடு |
||
வாரல், வாழியர்!-ஐய!-எம் தெருவே. |
உரை | |
வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - ஒக்கூர் மாசாத்தியார். |
186. முல்லை |
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த |
||
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி |
||
எயிறு என முகையும் நாடற்குத் |
||
துயில் துறந்தனவால்-தோழி!-எம் கண்ணே, |
உரை | |
பருவ வரவின், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி. |
220. முல்லை |
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின் |
||
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை |
||
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை, |
||
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக் |
||
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின் |
||
வண்டு சூழ் மாலையும், வாரார்; |
||
கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே. |
உரை | |
பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது. - ஒக்கூர் மாசாத்தி |
275. முல்லை |
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக் |
||
கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!- |
||
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப் |
||
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ? |
||
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு |
||
வல் வில் இளையர் பக்கம் போற்ற, |
||
ஈர் மணற் காட்டாறு வரூஉம் |
||
தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே. |
உரை | |
பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி |