முகப்பு |
ஓரம்போகியார் |
10. மருதம் |
யாய் ஆகியளே விழவு முதலாட்டி; |
||
பயறு போல் இணர பைந் தாது படீஇயர் |
||
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக் |
||
காஞ்சி ஊரன் கொடுமை |
||
கரந்தனள் ஆகலின், நாணிய வருமே. |
உரை | |
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - ஓரம்போகியர் |
70. குறிஞ்சி |
ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள் |
||
நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே; |
||
இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்; |
||
சில மெல்லியவே கிளவி; |
||
அனை மெல்லியல் யான் முயங்குங்காலே. |
உரை | |
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஓரம்போகியார் |
122. நெய்தல் |
பைங் கால் கொக்கின் புன் புறத்தன்ன |
||
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே |
||
வந்தன்று, வாழியோ, மாலை! |
||
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே! |
உரை | |
தலைமகள் பொழுது கண்டு அழிந்தது. - ஓரம்போகியார் |
127. மருதம் |
குருகு கொளக் குளித்த கெண்டை அயலது |
||
உரு கெழு தாமரை வால் முகை வெரூஉம் |
||
கழனிஅம் படப்பை காஞ்சி ஊர! |
||
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக, |
||
உள்ள பாணர் எல்லாம் |
||
கள்வர் போல்வர், நீ அகன்றிசினோர்க்கே. |
உரை | |
பாணன் வாயிலாகப் புக்கவழித் தலைமகற்குத் தோழி சொல்லியது. - ஓரம்போகியார் |
384. மருதம் |
உழுந்துடை கழுந்தின் கரும்புடைப் பணைத் தோள், |
||
நெடும் பல் கூந்தல், குறுந்தொடி, மகளிர் |
||
நலன் உண்டு துறத்தி ஆயின், |
||
மிக நன்று அம்ம-மகிழ்ந!-நின் சூளே. |
உரை | |
'நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளூறவு நன்றாயிருந்தது!' என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது. - ஓரம்போகியார் |