முகப்பு |
தும்பிசேர் கீரனார் |
61. மருதம் |
தச்சன் செய்த சிறு மா வையம், |
||
ஊர்ந்து இன்புறாஅர்ஆயினும், கையின் |
||
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல, |
||
உற்று இன்புறேஎம்ஆயினும், நற்றோர்ப் |
||
பொய்கை ஊரன் கேண்மை |
||
செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே. |
உரை | |
தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது. - தும்பிசேர்கீரன் |
316. நெய்தல் |
ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும், |
||
நோய் மலி வருத்தம் அன்னை அறியின், |
||
உளெனோ வாழி-தோழி!-விளியாது, |
||
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை |
||
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட, |
||
ஆய்ந்த அலவன் துன்புறு துனைபரி |
||
ஓங்கு வரல் விரிதிரை களையும் |
||
துறைவன் சொல்லோ பிற ஆயினவே? |
உரை | |
வரைவிடை 'வேறு படுகின்றாய்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- தும்பி சேர் கீரன் |
320. நெய்தல் |
பெருங் கடற் பரதவர் கோள் மீன் உணங்கலின் |
||
இருங் கழிக் கொண்ட இறவின் வாடலொடு, |
||
நிலவு நிற வெண் மணல் புலவ, பலஉடன், |
||
எக்கர்தொறும் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள், |
||
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ் |
||
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப் |
||
புன்னைஅம் சேரி இவ் ஊர் |
||
கொன் அலர் தூற்றும், தன் கொடுமையானே. |
உரை | |
அலர் அஞ்சி ஆற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது.- தும்பிசேர் கீரன் |
392. குறிஞ்சி |
அம்ம வாழியோ-மணிச் சிறைத் தும்பி!- |
||
நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு |
||
அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின், |
||
கடவை மிடைந்த துடவைஅம் சிறு தினைத் |
||
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை |
||
தமரின் தீராள் என்மோ-அரசர் |
||
நிரை செலல் நுண் தோல் போலப் |
||
பிரசம் தூங்கு மலைகிழவோற்கே! |
உரை | |
வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - தும்பிசேர் கீரனார் |