முகப்பு |
பலா (பலவு) |
18. குறிஞ்சி |
வேரல் வேலி வேர் கோட் பலவின் |
||
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி! |
||
யார் அஃது அறிந்திசினோரே?-சாரல் |
||
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள் |
||
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே! |
உரை | |
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது.-கபிலர் |
83. குறிஞ்சி |
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் |
||
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ, அன்னை- |
||
தம் இல் தமது உண்டன்ன சினைதொறும் |
||
தீம் பழம் தூங்கும் பலவின் |
||
ஓங்கு மலை நாடனை, 'வரும்' என்றோளே! |
உரை | |
தலைமகன் வரைந்து எய்துதல் உணர்த்திய செவிலியைத் தோழி வாழ்த்தியது. - வெண்பூதன் |
90. குறிஞ்சி |
எற்றோ வாழி?-தோழி!-முற்றுபு |
||
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய |
||
மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க் |
||
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி, |
||
வரை இழி அருவி உண்துறைத் தரூஉம் |
||
குன்ற நாடன் கேண்மை |
||
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத்தோழி கூறியது. - மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் |
153. குறிஞ்சி |
குன்றக் கூகை குழறினும், முன்றிற் |
||
பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும், |
||
அஞ்சும்மன்; அளித்து-என் நெஞ்சம்!-இனியே, |
||
ஆர் இருட் கங்குல் அவர்வயின் |
||
சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே. |
உரை | |
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுகின்றுழி, 'நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்கு, 'அவர் வரவு நமது ஆற்றாமைக்குக் காரணம் ஆம்' எனத் தலைமகள் கூறியது. - கபிலர் |
257. குறிஞ்சி |
வேரும் முதலும் கோடும் ஒராங்குத் |
||
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக் |
||
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோட் பலவின் |
||
ஆர்கலி வெற்பன் வருதொறும், வரூஉம்; |
||
அகலினும் அகலாதாகி |
||
இகலும்-தோழி!-நம் காமத்துப் பகையே. |
உரை | |
வரைவு உணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உறையூர்ச் சிறுகந்தன் |
352. பாலை |
நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன |
||
கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை |
||
அகல்இலைப் பலவின் சாரல் முன்னி, |
||
பகல் உறை முது மரம் புலம்பப் போகும் |
||
சிறு புன் மாலை உண்மை |
||
அறிவேன்-தோழி-! அவர்க் காணா ஊங்கே. |
உரை | |
பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது. - கடியலூர் உருத்திரங் கண்ணனார் |
365. குறிஞ்சி |
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும் |
||
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே- |
||
துன் அரு நெடு வரைத் ததும்பி அருவி |
||
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும் |
||
மருங்கில் கொண்ட பலவின் |
||
பெருங் கல் நாட! நீ நயந்தோள் கண்ணே. |
உரை | |
'யான் வரையுந்துணையும் ஆற்றவல்லளோ?' என வினவிய கிழவற்குத் தோழி சொல்லியது.- மதுரை நல்வெள்ளி |
373. குறிஞ்சி |
நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும், |
||
இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும், |
||
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக் |
||
கேடு எவன் உடைத்தோ-தோழி!-நீடு மயிர்க் |
||
கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை |
||
புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி |
||
காந்தள்அம் சிறுகுடிக் கமழும் |
||
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? |
உரை | |
அலர் மிக்கவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- மதுரைக் கொல்லன் புல்லன் |
385. குறிஞ்சி |
பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை, |
||
சிலை விற் கானவன் செந் தொடை வெரீஇ |
||
செரு உறு குதிரையின் பொங்கி, சாரல் |
||
இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும் |
||
பெரு வரை அடுக்கத்துக் கிழவோன் என்றும் |
||
அன்றை அன்ன நட்பினன்; |
||
புதுவோர்த்து அம்ம, இவ் அழுங்கல் ஊரே. |
உரை | |
வேற்று வரைவு மாற்றியது. - கபிலர் |