முகப்பு |
புன்னை |
299. நெய்தல் |
இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப் |
||
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல், |
||
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல், |
||
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற் |
||
கண்டனமன், எம் கண்ணே; அவன் சொல் |
||
கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன் |
||
மணப்பின் மாண்நலம் எய்தி, |
||
தணப்பின் ஞெகிழ்ப, எம் தட மென் தோளே? |
உரை | |
சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெண்மணிப் பூதி |
303. நெய்தல் |
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு |
||
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல் |
||
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ! |
||
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப் |
||
பசந்தனள்மன் என் தோழி-என்னொடும் |
||
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல் |
||
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே. |
உரை | |
செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. - அம்மூவன் |
311. நெய்தல் |
அலர் யாங்கு ஒழிவ-தோழி!-பெருங் கடல் |
||
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும், |
||
நில்லாது கழிந்த கல்லென் கடுந் தேர் |
||
யான் கண்டன்றோஇலனே; பானாள் |
||
ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னைத் |
||
தாது சேர் நிகர்மலர் கொய்யும் |
||
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே? |
உரை | |
அலரஞ்சிய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - சேந்தன்கீரன் |
318. நெய்தல் |
எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின், |
||
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய், |
||
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன் |
||
குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று |
||
அறியாற்கு உரைப்பலோ, யானே? எய்த்த இப் |
||
பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள் |
||
பிழையா வஞ்சினம் செய்த |
||
களவனும், கடவனும், புணைவனும், தானே. |
உரை | |
கிழவன் கேட்கும் அண்மையன் ஆகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - அம்மூவன் |
320. நெய்தல் |
பெருங் கடற் பரதவர் கோள் மீன் உணங்கலின் |
||
இருங் கழிக் கொண்ட இறவின் வாடலொடு, |
||
நிலவு நிற வெண் மணல் புலவ, பலஉடன், |
||
எக்கர்தொறும் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள், |
||
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ் |
||
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப் |
||
புன்னைஅம் சேரி இவ் ஊர் |
||
கொன் அலர் தூற்றும், தன் கொடுமையானே. |
உரை | |
அலர் அஞ்சி ஆற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது.- தும்பிசேர் கீரன் |
351. நெய்தல் |
வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள் |
||
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த |
||
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென |
||
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு |
||
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப் |
||
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி |
||
இன் நகை ஆயத்தாரோடு |
||
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே? |
உரை | |
தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, 'நமர் அவர்க்கு வரைவு நேரார்கொல்லோ?'என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது. - அம்மூவன் |