முகப்பு |
நண்டு |
117. நெய்தல் |
மாரி ஆம்பல் அன்ன கொக்கின் |
||
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு |
||
கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர் |
||
கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன் |
||
வாராது அமையினும் அமைக! |
||
சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே. |
உரை | |
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது. - குன்றியனார் |
303. நெய்தல் |
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு |
||
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல் |
||
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ! |
||
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப் |
||
பசந்தனள்மன் என் தோழி-என்னொடும் |
||
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல் |
||
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே. |
உரை | |
செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. - அம்மூவன் |
316. நெய்தல் |
ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும், |
||
நோய் மலி வருத்தம் அன்னை அறியின், |
||
உளெனோ வாழி-தோழி!-விளியாது, |
||
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை |
||
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட, |
||
ஆய்ந்த அலவன் துன்புறு துனைபரி |
||
ஓங்கு வரல் விரிதிரை களையும் |
||
துறைவன் சொல்லோ பிற ஆயினவே? |
உரை | |
வரைவிடை 'வேறு படுகின்றாய்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- தும்பி சேர் கீரன் |
328. நெய்தல் |
சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி |
||
அலவன் சிறு மனை சிதைய, புணரி |
||
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன் |
||
நல்கிய நாள் தவச் சிலவே; அலரே, |
||
வில் கெழு தானை விச்சியர் பெருமகன் |
||
வேந்தரொடு பொருத ஞான்றை, பாணர் |
||
புலி நோக்கு உறழ் நிலை கண்ட |
||
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே. |
உரை | |
வரைவிடை வேறுபடும் கிழத்தியை, 'அவர் வரையும் நாள் அணித்து' எனவும்,'அலர் அஞ்சல்' எனவும் கூறியது. - பரணர் |
351. நெய்தல் |
வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள் |
||
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த |
||
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென |
||
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு |
||
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப் |
||
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி |
||
இன் நகை ஆயத்தாரோடு |
||
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே? |
உரை | |
தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, 'நமர் அவர்க்கு வரைவு நேரார்கொல்லோ?'என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது. - அம்மூவன் |
401. நெய்தல் |
அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல் |
||
நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் |
||
ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு |
||
கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள், |
||
நக்கு விளையாடலும் கடிந்தன்று, |
||
ஐதே கம்ம, மெய் தோய் நட்பே! |
உரை | |
வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள், தன்னுள்ளே சொல்லியது. - அம்மூவன் |
||