துனி - ஊடல்
துனிப்ப - ஊடுவார்
துனியல் - வருந்தாதே
துனைந்து - விரைந்து
துன்னித்துன்னி - அடுத்தடுத்து
தூ
தூ - தூய
தூங்குமணி - தொங்குகின்ற மணி
தூட்டடி - தூணின் பிளப்பு
தூம்பு - குழல்
தூம்பு - துளை
தூயவன் - குற்றமில்லாதவன்
தூவ - வீச
தூவார் - தூவுவார்
தெ
தெய்ய: அசை
தெய்வத்து - தேவர்கட்கு
தெரிபு - தெரிந்துகொண்டு
தெரிமணி - ஆராய்ந்தெடுத்த மணி
தெருவம் - தெரு (ப-தி)
தெருள - விளங்கும்படி
தெவி - கொண்டு
தெல்வு - பகை
தெளி - தெளிவு
தெளிர - ஒளிபெற
தெறல் - சுடுகின்ற பண்பு
தெறுகதிர்க்கனலி - சுடுகின்ற கதிரையுடைய மழு
தென்றல் - தென்றிசைக் காற்று
தென்னவர் - பாண்டிய மன்னர்
தென்னவன் - பாண்டியன்
தே
தேசு - செயற்கையழகு
தேமணம் - இனியமணம்
தேம் - தேன்
தேயாமண்டிலம் - ஞாயிறு
தேரான் - பாண்டியன்
தேர்ச்சி - தெளிவு
தேன் - வண்டு
தை
தைந்நீராடுதல் - தைத்திங்களின் நீராடல்
தைந்நீர் - தைந்நீரே!
தையலவர் - மனைவியர்
தையல் - அழகு!
தையினார் - அணிந்தார்
தையினாள் - செருகினாள்
தொ
தொகூஉம் - கூடாநின்ற
தொகை - தோகை
தொடங்கு - தொடங்குவாயாக
தொடர் - சங்கிலி
தொடி - தோளணி
தொடி - வலயம்
தொட்டதை - காலிலிட்டது
தொட்டு - கட்டி
தொண்டு - ஒன்பது; மூலப்பகுதி
தொய்யகம் - தலைக்கோலம்
தொய்யா - கெடாத
தொலைபு - தொலைந்து
தொழாஅ - தொழுது
தொழிலின் - படைத்தல் முதலிய
           முத்தொழில் காரணமாக
தொழுகல்லீர் - தொழமாட்டாதீர்
தொழுதகை யமைதியின் - கூப்பிய கையினது
           அமைதியில்
தொழுதனிர் - தொழுது
தொழுதி - கூட்டம்
தொழுதும் - தொழுவேம்
தொழுநர் - வணங்குவோர்
தொன்னிலை - பழைய நிலைமை
தோ
தோக்கை - தொங்கல்
தோடு - காதணி
தோட்டி - அங்குசம்
" - ஆணை
தோலா - தோற்றலில்லாத
தோழம் - ஒருகால அளவை (ப-தி)
தோள்வளை - வாகுவலயம்
தோற்றம் - ஒளி
தோற்றம் - வெளிப்படுதல்
தோற்றுதும் - தோன்றுவிப்பேம்
தோன்றி - ஒருவகைக் கொடி
நகில் - முலை
நகின்முகடு - முலைமுகடு
நகுதல் - சிரித்தல்