நகை: ஆகுபெயர் (வெட்சி) 13-59 | |
" - சிரிப்பு | 3-34 |
" - மகிழ்ச்சி | 6-12 |
" - மலர்ச்சி | 8-74 |
" - விளக்கம் | 8-48 |
நகைசான்ற - சிரிப்புப் பொருந்திய | 8-77 |
நக்கலர்துழாய் - சிரித்து மலரும் துளசி | 4-58 |
நச்சினார்- விரும்பியவர் | 20-85 |
நடன் -கூத்தன் | 22-42 |
நடு - உட்பொருள்;அந்தரியாமி | 2-25 |
நடுவுநிலை- செப்பமுடைமை | 3-34 |
நடுவண் -நடுவே | 4-23 |
நடை - கால் | 10-85 |
நட்டவன் - நட்புச் செய்தவன் | 4-16 |
நட்டோர் - நட்புச் செய்தோர் | 3-57 |
நணிநணித்து - மிகவும் அண்மையது | 17-25 |
நண்ணி - அணுகி | 7-69 |
நத்து - நத்தை | 10-85 |
நந்த - பெருக | 7-9 |
நயத்தகு - விரும்பத் தகுந்த | 9-82 |
நயம் -நன்மை | 3-34 |
நயவரும்- நயக்கப்படும் | 8-75 |
நயனில்- நலமில்லாத | 11-45 |
நரந்தம்- ஒருவகை மணப்புல் | 7-11 |
நலம் - கற்பு(ப-தி) | 1-39 |
நரம்புளர்நர்- யாழ்நரம்பினை வருடுவோர் | 9-93 |
நலனந்த- நன்மைபெருக | 7-9 |
நலனழிந்து- நன்மைகெட்டு | 6-49 |
நல்கலும்- அளிசெய்தலும் | 9-32 |
நல்கல்- அருளுதல் | 4-49 |
நல்லது- அறம் | 10-88 |
நல்லாள்- ஒருத்தி | 6-87 |
நவின்றதை- கூறியது | 8-77 |
நவின்று- விரும்பி | 6-28; 12-96 |
நவின்றோர் - பயின்றவர் | 9-72 |
நளி - செறிவு |
7-11; 8-94 |
நளிபுனல் - குளிர்ந்த நீர் | 8-104 |
நளிமாரி- குளிர்ந்த மழை | 11-76 |
நளினத்து- தாமரைப் பூவில் | 5-12 |
நள்ளி - நண்டு | 10-85 |
நறவம் - கள் | 6-49 |
நறவிதழ்- நறவம்பூ | 8-75 |
நறா - கள் | 7-62 |
நறுநீர்- நறுமணமுடைய நீர் | 11-140 |
நறை -ஒருவகை மணக்கொடி | 8-26 |
நற்கு - நன்றாக | 3-62 |
நனவன்று- நனவுமில்லை | 8-77 |
நனி - மிக | 2-40 |
நனியுணர்ந்து - நன்றாக அறிந்து | 5-37 |
நன்கனம்- நன்றாக | 15-25 |
நன்கிடைத்தேர்- நல்ல நெட்டியாற் செய்த தேர் | 6-35 |
நன்பல- பல நன்மை | 12-101 |
நன்னர்- நல்ல | 8-44 |
நாகம்- பாம்பு; ஒருமரம் | 12-4 |
நாகம் -வாசுகி | 5-24 |
நாகர்- தேவர் | 11-67 |
நாகர்நகர்- ஆதிசேடனார் கோயில் (ப-தி) | 1-59 |
நாஞ்சிலவை- கலப்பையினையுடையை | 15-57 |
நாஞ்சில்- கலப்பை | 1-5;
4-39 |
நாடின் -ஆராயின் | 2-55 |
நாட்டம்- கண் | 4-61 |
நாணா -நாணாக | 5-24 |
நாணாள்கொல்- நாணமுடையவளோ! | 11-45 |
நாண் -பொன்னாண் | 7-55 |
நாதர்- உருத்திரம் | 8-7 |
நாப்பண்- நடுவிடம் | 2-32 |
நாமம் -அச்சம் | 3-92;
15-63 |
நாமம்- பெயர் | 15-25 |
நாரிகை- பெண் | 12-55 |
நார் -பன்னாடை | 6-49 |
நாலெண்தேவர்- நால்வகைப் பட்ட எண்ணினையுடைய தேவர். அவராவார் முப்பத்து மூவர் | 3-28 |
நால்வகையூழி- நான்குவகை யுகங்கள் | 3-79 |
நாவலந்தணர்- நாவன்மையுடைய சான்றோர் | 1-14 |
நாவலந்தண்பொழில் - நாவலந் தீவு | 5-8 |
நாவாய்- கப்பல் | 10-39 |