|
10 மந்திரம் கொடுத்த காதை |
|
|
||
|
[ மணிமேகலாதெய்வம் வந்துதோன்றி |
|
|
மந்திரம் கொடுத்த பாட்டு ] |
|
|
||
|
அறவோன் ஆசனத்து ஆயிழை அறிந்த |
|
|
பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐதுஎன |
|
|
விரைமலர் ஏந்தி விசும்பூடு இழிந்து |
|
|
பொருஅறு பூங்கொடி பூமியில் பொலிந்தென |
|
5
|
வந்து தோன்றிய மணிமே கலாதெய்வம் |
உரை |
|
||
|
முந்தைப் பிறப்புஎய்தி நின்றோள் கேட்ப, |
|
|
உயிர்கள் எல்லாம் உணர்வுபாழ் ஆகிப் |
|
|
பொருள்வழங்கு செவித்துளை தூர்ந்துஅறிவு இழந்த |
|
|
வறந்தலை உலகத்து அறம்பாடு சிறக்கச் |
|
10
|
சுடர்வழக்கு அற்றுத் தடுமாறு காலைஓர் |
|
|
||
|
இளவள ஞாயிறு தோன்றியது என்ன |
|
|
நீயோ தோன்றினை நின்அடி பணிந்தேன் |
உரை |
|
நீயே ஆகிநிற்கு அமைந்தஇவ் ஆசனம் |
|
|
நாமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன் |
|
15
|
பூமிசை ஏற்றினேன் புலம்புஅறுக என்றே |
|
|
|
|
|
வலம்கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர், |
உரை |
|
பொலங்கொடி நிலமிசைச் சேர்ந்துஎனப் பொருந்தி |
|
|
உன்திரு அருளால் என்பிறப்பு உணர்ந்தேன் |
|
|
என்பெருங் கணவன் யாங்குஉளன் என்றலும், |
உரை |
20
|
இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு |
|
|
||
|
புலத்தகை எய்தினை பூம்பொழில் அகவயின் |
|
|
இடங்கழி காமமொடு அடங்கா னாய்அவன் |
|
|
மடந்தை மெல்இயல் மலர்அடி வணங்குழிச் |
|
|
சாது சக்கரன் மீவிசும்பு திரிவோன் |
|
25
|
தெருமரல் ஒழித்துஆங்கு இரத்தின தீவத்துத் |
|
|
||
|
தரும சக்கரம் உருட்டினன் வருவோன் |
|
|
வெங்கதிர் அமயத்து வியன்பொழில் அகவயின் |
|
|
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி |
உரை |
|
மெல்இயல் கண்டனை மெய்ந்நடுக் குற்றனை |
|
30
|
நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச |
|
|
||
|
இராகுலன் வந்தோன் யார்என வெகுளலும் |
உரை |
|
விராமலர்க் கூந்தல் அவன்வாய் புதையா |
|
|
வான்ஊடு இழிந்தோன் மலர்அடி வணங்காது |
|
|
நாநல் கூர்ந்தனை என்றுஅவன் தன்னொடு |
|
35
|
பகைஅறு பாத்தியன் பாதம் பணிந்துஆங்கு, |
|
|
||
|
அமர கேள்நின் தமர்அலம் ஆயினும் |
|
|
அம்தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம் |
|
|
உண்டி யாம்உன் குறிப்பினம் என்றலும் |
உரை |
|
எம்அனை உண்கேன் ஈங்குக் கொணர்கென | |
40
|
அந்நாள் அவன்உண் டருளிய அவ்வறம் |
|
|
||
|
நின்ஆங்கு ஒழியாது நின்பிறப்பு அறுத்திடும். |
உரை |
|
உவவன மருங்கில் உன்பால் தோன்றிய |
|
|
உதய குமரன் அவன்உன் இராகுலன் |
|
|
ஆங்குஅவன் அன்றியும் அவன்பால் உள்ளம் |
|
45
|
நீங்காத் தன்மை நினக்கும்உண்டு ஆகலின் |
|
|
||
|
கந்த சாலியின் கழிபெரு வித்துஓர் |
|
|
வெந்துஉகு வெண்களர் வீழ்வது போன்ம்என |
|
|
அறத்தின் வித்தாங்கு ஆகிய உன்னைஓர் |
|
|
திறப்படற்கு ஏதுவாச் சேயிழை செய்தேன். |
உரை |
50
|
இன்னும் கேளாய் இலக்குமி! நீநின் |
|
|
||
|
தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும் |
|
|
ஆங்குஅவர் தம்மை அங்கநாட்டு அகவயின் |
|
|
கச்சயம் ஆளும் கழல்கால் வேந்தன் |
|
|
துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன் |
|
55
|
அவருடன் ஆங்குஅவன் அகல்மலை ஆடிக் |
|
|
||
|
கங்கைப் பேர்யாற்று அடைகரை இருந்துழி |
உரை |
|
மறவணம் நீத்த மாசுஅறு கேள்வி |
|
|
அறவணன் ஆங்குஅவன் பால்சென் றோனை |
|
|
ஈங்கு வந்தீர் யார்என்று எழுந்துஅவன் |
|
60
|
பாங்குஉளி மாதவன் பாதம் பணிதலும் |
உரை |
|
||
|
ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன் |
|
|
மாதுயர் எவ்வம் மக்களை நீக்கி |
|
|
விலங்கும் தம்முள் வெரூஉம்பகை நீக்கி |
|
|
உடங்குஉயிர் வாழ்கஎன்று உள்ளம் கசிந்துஉகத் |
|
65
|
தொன்றுகா லத்து நின்றுஅறம் உரைத்த |
|
|
||
|
குன்றம் மருங்கில் குற்றம் கெடுக்கும் |
|
|
பாத பங்கயம் கிடத்தலின் ஈங்குஇது |
|
|
பாதபங் கயமலை எனும்பெயர்த்து ஆயது |
|
|
தொழுதுவலம் கொள்ள வந்தேன் ஈங்குஇப் |
|
70
|
பழுதுஇல் காட்சியீர் நீயிரும் தொழும்என |
உரை |
|
||
|
அன்றுஅவன் உரைத்த அவ்வுரை பிழையாது |
|
|
சென்றுகை தொழுது சிறப்புச் செய்தலின் |
|
|
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் |
|
|
கோதைஅம் சாயல் நின்னொடு கூடினர். |
உரை |
75
|
அறிபிறப்பு உற்றனை அறம்பாடு அறிந்தனை |
|
|
||
|
பிறஅறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை |
|
|
பல்வேறு சமயப் படிற்றுஉரை எல்லாம் |
|
|
அல்லியங் கோதை கேட்குறும் அந்நாள் |
|
|
இளையள் வளையோள் என்றுஉனக்கு யாவரும் |
|
80
|
விளைபொருள் உரையார் வேற்றுஉரு எய்தவும், |
|
|
||
|
அந்தரம் திரியவும் ஆக்கும்இவ் அருந்திறல் |
|
|
மந்திரம் கொள்கென வாய்மையின் ஓதி |
உரை |
|
மதிநாள் முற்றிய மங்கலத் திருநாள் |
|
|
பொதுஅறிவு இகழ்ந்து புலம்உறு மாதவன் |
|
85
|
திருஅறம் எய்துதல் சித்தம்என்று உணர்நீ |
|
|
||
|
மன்பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி |
|
|
நின்பதிப் புகுவாய் என்றுஎழுந்து ஓங்கி, |
|
|
மறந்ததும் உண்டுஎன மறித்துஆங்கு இழிந்து |
|
|
சிறந்த கொள்கைச் சேயிழை கேளாய் |
|
90
|
மக்கள் யாக்கை உணவின் பிண்டம் |
|
|
||
|
இப்பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும்என்று |
|
|
ஆங்குஅது கொடுத்துஆங்கு அந்தரம் எழுந்து |
|
|
நீங்கியது ஆங்கு நெடுந்தெய்வம் தான்என். |
உரை |
|
||
|
மந்திரம் கொடுத்த காதை முற்றிற்று. |
|