|
20 உதயகுமரனை வாளால் எறிந்த காதை |
|
|
||
|
[ மணிமேகலை, காயசண்டிகைவடிவுஎய்தக் காயசண்டிகை கணவனாகிய காஞ்சனன்என்னும் விச்சாதரன் வந்து காயசண்டிகையாம் எனக்கருத அவள் பின்னிலைவிடா உதயகுமரனைப் புதையிருட்கண் உலகஅறவியில் வாளால்எறிந்துபோன பாட்டு ] |
|
|
||
|
அரசன் ஆணையின் ஆயிழை அருளால் | |
|
நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம் | |
|
தீப்பிறப்பு உழந்தோர் செய்வினைப் பயத்தான் | |
|
யாப்புஉடை நற்பிறப்பு எய்தினர் போலப் | |
5
|
பொருள்புரி நெஞ்சில் புலவோன் கோயிலும் | |
|
||
|
அருள்புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் | |
|
அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும் | |
|
கட்டுஉடைச் செல்வக் காப்புஉடைத் தாக, | உரை |
|
ஆயிழை சென்றதூஉம் ஆங்குஅவள் தனக்கு | |
10
|
வீயா விழுச்சீர் வேந்தன் பணித்ததூஉம் | |
|
||
|
சிறையோர் கோட்டம் சீத்துஅருள் நெஞ்சத்து | |
|
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும் | |
|
கேட்டனன் ஆகிஅத் தோட்டார் குழலியை | உரை |
|
மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் | |
15
|
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று | |
|
||
|
பற்றினன் கொண்டுஎன் பொன்தேர் ஏற்றிக் | |
|
கற்றுஅறி விச்சையும் கேட்டுஅவள் உரைக்கும் | |
|
முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே | |
|
மதுக்கமழ் தாரோன் மனம்கொண்டு எழுந்து | |
20
|
பலர்பசி களையப் பாவைதான் ஒதுங்கிய | |
|
||
|
உலக அறவியின் ஊடுசென்று ஏறலும், | உரை |
|
மழைசூழ் குடுமிப் பொதியில் குன்றத்துக் | |
|
கழைவளர் கான்யாற்றுப் பழவினைப் பயத்தால் | |
|
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் | |
25
|
ஈர்ஆறு ஆண்டு வந்தது வாராள் | |
|
||
|
காயசண் டிகைஎனக் கையறவு எய்திக் | உரை |
|
காஞ்சனன் என்னும் அவள்தன் கணவன் | |
|
ஓங்கிய மூதூர் உள்வந்து இழிந்து | |
|
பூத சதுக்கமும் பூமரச் சோலையும் | |
30
|
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் | |
|
||
|
தேர்ந்தனன் திரிவோன் ஏந்துஇள வனமுலை | |
|
மாந்தர் பசிநோய் மாற்றக் கண்டுஆங்கு, | உரை |
|
இன்றுநின் கையின் ஏந்திய பாத்திரம் | |
|
ஒன்றே ஆயினும் உண்போர் பலரால் | |
35
|
ஆனைத் தீநோய் அரும்பசி களைய | |
|
||
|
வான வாழ்க்கையர் அருளினர் கொல்எனப் | |
|
பழைமைக் கட்டுரை பலபா ராட்டவும், | உரை |
|
விழையா உள்ளமொடு அவன்பால் நீங்கி | |
|
உதய குமரன் தன்பால் சென்று | உரை |
40
|
நரைமூ தாட்டி ஒருத்தியைக் காட்டித் | |
|
||
|
தண்அறல் வண்ணம் திரிந்துவே றாகி | |
|
வெண்மணல் ஆகிய கூந்தல் காணாய் | |
|
பிறைநுதல் வண்ணம் காணா யோநீ | |
|
நரைமையில் திரைதோல் தகைஇன்று ஆயது | |
45
|
விறல்வில் புருவம் இவையும் காணாய் | |
|
||
இறவின் உணங்கல் போன்றுவே றாயின | ||
|
கழுநீர்க் கண்காண் வழுநீர் சுமந்தன | |
|
குமிழ்மூக்கு இவைகாண் உமிழ்சீ ஒழுக்குவ | |
|
நிரைமுத்து அனைய நகையும் காணாய் | |
50
|
சுரைவித்து ஏய்ப்பப் பிறழ்ந்துவேறு ஆயின | |
|
||
|
இலவுஇதழ்ச் செவ்வாய் காணா யோநீ | |
|
புலவுப் புண்போல் புலால்புறத் திடுவது | |
|
வள்ளைத் தாள்போல் வடிகாது இவைகாண் | |
|
உள்ஊன் வாடிய உணங்கல் போன்றன | |
55
|
இறும்பூது சான்ற முலையும் காணாய் | |
|
||
|
வெறும்பை போல வீழ்ந்துவேறு ஆயின | |
|
தாழ்ந்துஒசி தெங்கின் மடல்போல் திரங்கி | |
|
வீழ்ந்தன இளவேய்த் தோளும் காணாய் | |
|
நரம்பொடு விடுதோல் உகிர்த்தொடர் கழன்று | |
60
|
திரங்கிய விரல்கள் இவையும் காணாய் | |
|
||
|
வாழைத் தண்டே போன்ற குறங்குஇணை | |
|
தாழைத் தண்டின் உணங்கல் காணாய் | |
|
ஆவக் கணைக்கால் காணா யோநீ | |
|
மேவிய நரம்போடு என்புபுறம் காட்டுவ | |
65
|
தளிர்அடி வண்ணம் காணா யோநீ | |
|
||
|
முளிமுதிர் தெங்கின் உதிர்காய் உணங்கல் | |
|
பூவினும் சாந்தினும் புலால்மறைத்து யாத்துத | |
|
தூசினும் மணியினும் தொல்லோர் வகுத்த | |
|
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன்என | |
70
|
விஞ்சை மகளாய் மெல்இயல் உரைத்தலும், | உரை |
|
||
|
தன்பா ராட்டும்என் சொல்பயன் கொள்ளாள் | |
|
பிறன்பின் செல்லும் பிறன்போல் நோக்கும் | |
|
மதுக்கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு | |
|
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப் | |
75
|
பவளக் கடிகையில் தவளவாள் நகையும் | |
|
||
|
குவளைச் செங்கணும் குறிப்பொடு வழாஅள் | |
|
ஈங்குஇவன் காதலன் ஆதலின் ஏந்துஇழை | |
|
ஈங்குஒழிந் தனள்என இகல்எரி பொத்தி | |
|
மற்றுஅவள் இருந்த மன்றப் பொதியிலுள் | |
80
|
புற்றுஅடங்கு அரவின் புக்குஒளித்து அடங்கினன் | |
|
||
|
காஞ்சனன் என்னும் கதிர்வாள் விஞ்சையன், | உரை |
|
ஆங்குஅவள் உரைத்த அரசிளங் குமரனும் | |
|
களையா வேட்கை கைஉதிர்க் கொள்ளான் | |
|
வளைசேர் செங்கை மணிமே கலையே | |
85
|
காயசண் டிகையாய்க் கடிஞை ஏந்தி | |
|
||
|
மாய விஞ்சையின் மனம்மயக் குறுத்தனள் | |
|
அம்பல மருங்கில் அயர்ந்துஅறிவு உரைத்தஇவ் | |
|
வம்பலன் தன்னொடுஇவ் வைகுஇருள் ஒழியாள் | |
|
இங்குஇவள் செய்தி இடைஇருள் யாமத்து | |
90
|
வந்துஅறி குவம்என மனம்கொண்டு எழுந்து | |
|
||
|
வான்தேர்ப் பாகனை மீன்திகழ் கொடியனைக் | |
|
கருப்பு வில்லியை அருப்புக்கணை மைந்தனை | |
|
உயாவுத் துணையாக வயாவொடும் போகி, | உரை |
|
ஊர்துஞ்சு யாமத்து ஒருதனி எழுந்து | |
95
|
வேழம் வேட்டுஎழும் வெம்புலி போலக் | |
|
||
|
கோயில் கழிந்து வாயில் நீங்கி | |
|
ஆயிழை இருந்த அம்பலம் அணைந்து | |
|
வேக வெந்தீ நாகம் கிடந்த | |
|
போகுஉயர் புற்றுஅளை புகுவான் போல | |
100
|
ஆகம் தோய்ந்த சாந்துஅலர் உறுத்த | |
|
||
|
ஊழ்அடி இட்டுஅதன் உள்அகம் புகுதலும் | உரை |
|
ஆங்குமுன் இருந்த அலர்தார் விஞ்சையன் | |
|
ஈங்குஇவன் வந்தனன் இவள்பால் என்றே | |
|
வெஞ்சின அரவம் நஞ்சுஎயிறு அரும்பத் | |
105
|
தன்பெரு வெகுளியின் எழுந்துபை விரித்தென | |
|
||
|
இருந்தோன் எழுந்து பெரும்பின் சென்றுஅவன் | |
|
சுரும்புஅறை மணித்தோள் துணிய வீசிக் | |
|
காயசண் டிகையைக் கைக்கொண்டு அந்தரம் | |
|
போகுவல் என்றே அவள்பால் புகுதலும், | உரை |
110
|
நெடுநிலைக் கந்தின் இடவயின் விளங்கக் | |
|
||
|
கடவுள் எழுதிய பாவைஆங்கு உரைக்கும்: | |
|
அணுகல் அணுகல் விஞ்சைக் காஞ்சன | |
|
மணிமே கலைஅவள் மறைந்துஉரு எய்தினள், | |
|
காயசண் டிகைதன் கடும்பசி நீங்கி | |
115
|
வானம் போவுழி வந்தது கேளாய் | உரை |
|
||
|
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த | |
|
விந்த மால்வரை மீமிசைப் போகார் | |
|
போவார் உளர்எனில் பொங்கிய சினத்தள் | |
|
சாயையின் வாங்கித் தன்வயிற்று இடூஉம் | |
120
|
விந்தம் காக்கும் விந்தா கடிகை | |
|
||
|
அம்மலை மிசைப்போய் அவள்வயிற்று அடங்கினள். | |
|
கைம்மை கொள்ளேல் காஞ்சன இதுகேள்: | உரை |
|
ஊழ்வினை வந்துஇங்கு உதய குமரனை | |
|
ஆர்உயிர் உண்ட தாயினும் அறியாய் | |
125
|
வெவ்வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன! | |
|
||
|
அவ்வினை நின்னையும் அகலாது ஆங்குஉறும் | |
|
என்றுஇவை தெய்வம் கூறலும் எழுந்து | |
|
கன்றிய நெஞ்சின் சுடுவினை உருத்துஎழ | |
|
விஞ்சையன் போயினன் விலங்குவிண் படர்ந்துஎன. | உரை |
|
||
|
உதயகுமரனை
வாளால் எறிந்தகாதை முற்றிற்று.
|
|
மேல் |