04
குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு
சிதம்பரத்தில் தங்கி இருக்கும் காலத்தில் நீதிநெறி விளக்கம் என்னும் நூலும் இவரால் செய்யப்பெற்றது. மாணவர்களுக்கு நீதிநூலைக் கற்பிக்கவேண்டும் எனக் கருதுவோர் நீதிநெறி விளக்கத்தையே முதன்மையான நூலாகக் கருதிக் கற்பித்தனர் என்பது அனைவரும் உள்ளம் கொள்ளத்தக்கதாகும்.
சிதம்பரத்தினின்றும் திரும்பிய குமரகுருபரர் தம் ஞானாசிரியராகிய ஸ்ரீ மாசிலாமணி தேசிகரிடத்தில் கல்லாடை பெற்று குமரமுருபரமுனிவர் என வழங்கப்பெறுவாராயினர். அவருடைய ஞான தேசிகர்பால் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டை விளக்குமுகமாகப் பண்டார மும்மணிக் கோவை என்னும் நூல் திகழ்கின்றது.
தருமபுரத்தில் சிலகாலம் தங்கியிருந்த பின் இவர் காசிக்குச் சென்றார். தம் அறிவாற்றலாலும், தவச் சிறப்பாலும் டில்லி பாதுஷாவின் உள்ளத்தைக் கவர்ந்தார். காசியில் தங்கியிருந்த காலை ஹிந்துஸ்தானிய மொழியை விரைவில் கற்றுத் தேறினார். அம்மொழியில் தமக்கு விரைந்த புலமை வேண்டும் என்னும்