|
|
இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி, |
|
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறைப் |
|
புது நலன் இழந்த புலம்புமார் உடையள்; |
|
உதுக் காண் தெய்ய; உள்ளல் வேண்டும்- |
|
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக் |
|
கடலும் கானலும் தோன்றும் |
|
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே. |
உரை |
|
தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது. -வடம வண்ணக்கன் பேரிசாத்தன் |
|
வார் உறு வணர் கதுப்பு உளரி, புறம் சேர்பு, |
|
''அழாஅல்'' என்று நம் அழுத கண் துடைப்பார்; |
|
யார் ஆகுவர் கொல்?-தோழி!-சாரல் |
|
பெரும் புனக் குறவன் சிறு தினை மறுகால் |
|
கொழுங் கொடி அவரை பூக்கும் |
|
அரும் பனி அற்சிரம் வாராதோரே. |
உரை |
|
பருவம் கண்டு அழிந்த தலைமகள் ''வருவர்'' என்று வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - கடுவன் மள்ளன் |
|
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் |
|
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ, அன்னை- |
|
தம் இல் தமது உண்டன்ன சினைதொறும் |
|
தீம் பழம் தூங்கும் பலவின் |
|
ஓங்கு மலை நாடனை, ''வரும்'' என்றோளே! |
உரை |
|
தலைமகன் வரைந் தெய்துதல் உணர்த்திய செவிலியைத் தோழி வாழ்த்தியது. - வெண்பூதன் |
|
பெயர்த்தனென் முயங்க, ''யான் வியர்த்தனென்'' என்றனள்; |
|
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே- |
|
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் |
|
வேங்கையும் காந்தளும் நாறி, |
|
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே. |
உரை |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மோசிகீரன் |
|
யாரினும் இனியன்; பேர் அன்பினனே- |
|
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் |
|
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர், |
|
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின் |
|
நாறா வெண் பூ கொழுதும் |
|
யாணர் ஊரன் பாணன் வாயே. |
உரை |
|
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி, வாயில் மறுத்தது. - வடம வண்ணக்கன் தாமோதரன் |
|
சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண் |
|
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி, |
|
பிறரும் கேட்குநர் உளர்கொல்?-உறை சிறந்து, |
|
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து, |
|
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும் |
|
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே. |
உரை |
|
''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - வெண்கொற்றன் |
|
''மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் |
|
கொடியோர்த் தெறூஉம்'' என்ப; யாவதும் |
|
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்; |
|
பசைஇப் பசந்தன்று, நுதலே; |
|
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று, தட மென் தோளே. |
உரை |
|
தலைமகள் தெய்வத்திற்குப் பராஅயது. - கபிலர் |
|
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன், |
|
சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித் |
|
தொல் முரண் சொல்லும் துன் அருஞ் சாரல், |
|
நடு நாள் வருதலும் வரூஉம்; |
|
வடு நாணலமே-தோழி!-நாமே. |
உரை |
|
இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது. -மதுரைக் கதக்கண்ணன் |
|
பா அடி உரல பகுவாய் வள்ளை |
|
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப; |
|
அழிவது எவன்கொல், இப் பேதை ஊர்க்கே?- |
|
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக் |
|
கருங் கட் தெய்வம் குடவரை எழுதிய |
|
நல் இயல் பாவை அன்ன இம் |
|
மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே. |
உரை |
|
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது;தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி, வாயில் மறுத்ததூஉம் ஆம். - பரணர் |
|
எற்றோ வாழி?-தோழி!-முற்றுபு |
|
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய |
|
மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க் |
|
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி, |
|
வரை இழி அருவி உண்துறைத் தரூஉம் |
|
குன்ற நாடன் கேண்மை |
|
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே. |
உரை |
|
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத்தோழி கூறியது. - மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் |
|