|
1
விழா அறை காதை
|
|
|
|
|
|
[
விழாஅறைந்த பாட்டு
]
|
|
|
|
|
|
உலகம் திரியா ஓங்குஉயர் விழுச்சீர்ப்
|
|
|
பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம்
படீஇய
|
|
|
ஓங்குயர் மலயத்து அருந்தவன்
உரைப்பத்
|
|
|
தூங்குஎயில் எறிந்த
தொடித்தோள் செம்பியன்
|
|
5
|
விண்ணவர் தலைவனை வணங்கிமுன்
நின்று
|
|
|
|
|
|
மண்ணகத்து என்தன் வான்பதி
தன்னுள்
|
|
|
மேலோர் விழைய விழாக்கோள்
எடுத்த
|
|
|
நால்ஏழ் நாளினும் நன்குஇனிது
உறைகென
|
|
|
அமரர் தலைவன் ஆங்குஅது
நேர்ந்தது
|
|
10
|
கவராக் கேள்வியோர்
கடவார் ஆகலின்,
|
உரை
|
|
|
|
|
மெய்த்திறம் வழக்கு
நன்பொருள் வீடுஎனும்,
|
|
|
இத்திறம் தத்தம்
இயல்பினில் காட்டும்,
|
|
|
சமயக் கணக்கரும் தம்துறை
போகிய
|
|
|
அமயக் கணக்கரும் அகலார்
ஆகிக
|
|
15
|
கரந்துஉரு எய்திய கடவு
ளாளரும்,
|
|
|
|
|
|
பரந்துஒருங்கு ஈண்டிய
பாடை மாக்களும
|
|
|
ஐம்பெருங் குழுவும், எண்பேர்
ஆயமும்
|
|
|
வந்துஒருங்கு குழீஇ வான்பதி
தன்னுள்
|
உரை
|
|
கொடித்தேர்த் தானைக்
கொற்றவன் துயரம்,
|
|
20
|
விடுத்த பூதம் விழாக்கோள்
மறப்பின்
|
|
|
|
|
|
மடித்த செவ்வாய் வல்எயிறு
இலங்க
|
|
|
இடிக்குரல் முழக்கத்து
இடும்பை செய்திடும்
|
|
|
தொடுத்தபா சத்துத்
தொல்பதி நரகரைப்
|
|
|
புடைத்துஉணும் பூதமும்
பொருந்தா தாயிடும்
|
|
25
|
மாயிரு ஞாலத்து அரசுதலை
ஈண்டும்
|
|
|
|
|
|
ஆயிரம் கண்ணோன்
விழாக்கால் கொள்கென,
|
உரை
|
|
வச்சிரக் கோட்டத்து
மணம்கெழு முரசம்
|
|
|
கச்சை யானைப் பிடர்த்தலை
ஏற்றி
|
|
|
ஏற்றுஉரி போர்த்த
இடியுறு முழக்கின்
|
|
30
|
கூற்றுக்கண் விளிக்கும்
குருதி வேட்கை
|
|
|
|
|
|
முரசுகடிப் பிடூஉம் முதுக்குடிப்
பிறந்தோன்
|
|
|
திருவிழை மூதூர் வாழ்கென்று
ஏத்தி
|
|
|
வானமும் மாரி பொழிக
மன்னவன்
|
|
|
கோள்நிலை திரியாக்
கோலோன் ஆகுக
|
உரை
|
35
|
தீவகச் சாந்தி செய்தரு
நல்நாள்
|
|
|
|
|
|
ஆயிரம் கண்ணோன் தன்னோடு
ஆங்குஉள
|
|
|
நால்வேறு தேவரும் நலத்தகு
சிறப்பில்
|
|
|
பால்வேறு தேவரும் இப்பதிப்
படர்ந்து
|
|
|
மன்னன் கரிகால் வளவன்
நீங்கியநாள்
|
|
40
|
இந்நகர் போல்வதுஓர்
இயல்பினது ஆகிப்
|
|
|
|
|
|
பொன்னகர் வறிதாப்
போதுவர் என்பது
|
|
|
தொல்நிலை உணர்ந்தோர்
துணிபொருள் ஆதலின்,
|
உரை
|
|
தோரண வீதியும் தோம்அறு
கோட்டியும்
|
|
|
பூரண கும்பமும் பொலம்பா
லிகைகளும்
|
|
45
|
பாவை விளக்கும் பலவுடன்
பரப்புமின்
|
உரை
|
|
|
|
|
காய்க்குலைக் கமுகும்
வாழையும் வஞ்சியும்
|
|
|
பூக்கொடி வல்லியும்
கரும்பும் நடுமின்
|
உரை
|
|
பத்தி வேதிகைப் பசும்பொன்
தூணத்து
|
|
|
முத்துத் தாமம் முறையொடு
நாற்றுமின
|
உரை
|
50
|
விழவுமலி மூதூர் வீதியும்
மன்றமும்
|
|
|
|
|
|
பழமணல் மாற்றுமின்
புதுமணல் பரப்புமின்
|
உரை |
|
கதலிகைக் கொடியும்
காழ்ஊன்று விலோதமும்
|
|
|
மதலை மாடமும் வாயிலும்
சேர்த்துமின்
|
உரை |
|
நுதல்விழி நாட்டத்து
இறையோன் முதலாப்
|
|
55
|
பதிவாழ் சதுக்கத்துத்
தெய்வம்ஈ றாக
|
|
|
|
|
|
வேறுவேறு சிறப்பின்
வேறுவேறு செய்வினை
|
|
|
ஆறுஅறி மரபின் அறிந்தோர்
செய்யுமின்
|
உரை |
|
தண்மணல் பந்தரும் தாழ்தரு
பொதியிலும்
|
|
|
புண்ணிய நல்உரை அறிவீர்
பொருந்துமின்
|
உரை |
60
|
ஒட்டிய சமயத்து உறுபொருள்
வாதிகள்
|
|
|
|
|
|
பட்டிமண் டபத்துப் பாங்குஅறிந்து
ஏறுமின்
|
உரை |
|
பற்றா மாக்கள் தம்முடன்
ஆயினும்
|
உரை |
|
செற்றமும் கலாமும்
செய்யாது அகலுமின்
|
|
|
வெண்மணல் குன்றமும்
விரிபூஞ் சோலையும்
|
|
65
|
தண்மணல் துருத்தியும்
தாழ்பூந் துறைகளும்
|
|
|
|
|
|
தேவரும் மக்களும் ஒத்துஉடன்
திரிதரும்
|
|
|
நால்ஏழ் நாளினும் நன்குஅறிந்
தீர்என்
|
உரை |
|
ஒளிறுவாள் மறவரும் தேரும்
மாவும்
|
|
|
களிறும் சூழ்தரக் கண்முரசு
இயம்பிப்
|
|
70
|
பசியும் பிணியும் பகையும்
நீங்கி
|
|
|
|
|
|
வசியும் வளனும் சுரக்கென
வாழ்த்தி
|
|
|
அணிவிழா அறைந்தனன்
அகநகர் மங்குஎன்.
|
உரை |
|
விழாவறை காதை முற்றிற்று.
|
|
|
|
|
|
விழா
அறை காதை முற்றிற்று.
|
|
|