|
19
சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய
|
|
|
காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை காயசண்டிகை
வடிவாய்ச் சிறைக்கோட்டம்புக்குச்
சிறைவீடு செய்து சிறைக் கோட்டம்
அறக்கோட்டம் ஆக்கிய பாட்டு
]
|
|
|
|
|
|
முதியாள்
திருந்து அடி மும்மையின் வணங்கி |
|
|
மதுமலர்த்
தாரோன் வஞ்சினம் கூற |
|
|
ஏடுஅவிழ்
தாரோய் எம்கோ மகள்முன |
|
|
நாடாது துணிந்துநா
நல்கூர்ந் தனையென |
|
5
|
வித்தகர்
இயற்றிய விளங்கிய கைவினைச் |
|
|
|
|
|
சித்திரம்
ஒன்று தெய்வம் கூறலும், |
உரை
|
|
உதய குமரன்
உள்ளம் கலங்கிப் |
|
|
பொதியறைப்
பட்டோர் போன்றுமெய் வருந்தி |
|
|
அங்குஅவள்
தன்திறம் அயர்ப்பாய் என்றே |
|
10
|
செங்கோல்
காட்டிய தெய்வமும் திப்பியம் |
|
|
|
|
|
பைஅரவு அல்குல்
பலர்பசி களையக் |
|
|
கையில் ஏந்திய
பாத்திரம் திப்பியம் |
|
|
முத்தை முதல்வி
அடிபிழைத் தாய்எனச |
|
|
சித்திரம்
உரைத்த இதூஉம் திப்பியம் |
|
15
|
இந்நிலை
எல்லாம் இளங்கொடி செய்தியின் |
|
|
|
|
|
பின்அறி
வாம்எனப் பெயர்வோன் தன்னை |
உரை
|
|
அகல்வாய்
ஞாலம் ஆர்இருள் உண்ணப் |
|
|
பகல்அரசு
ஓட்டிப் பணைஎழுந்து ஆர்ப்ப |
|
|
மாலை நெற்றி
வான்பிறைக் கோட்டு |
|
20
|
நீல யானை
மேலோர் இன்றிக் |
|
|
|
|
|
காமர் செங்கை
நீட்டி வண்டுபடு |
|
|
பூநாறு கடாஅம்
செருக்கிக் கால்கிளர்ந்து |
|
|
நிறைஅழி
தோற்றமொடு தொடர முறைமையின் |
உரை
|
|
நகர நம்பியர்
வளையோர் தம்முடன் |
|
25
|
மகர வீணையின்
கிளைநரம்பு வடித்த |
|
|
|
|
|
இளிபுணர்
இன்சீர் எஃகுஉளம் கிழிப்பப் |
|
|
பொறாஅ
நெஞ்சில் புகைஎரி பொத்திப் |
|
|
பறாஅக்
குருகின் உயிர்த்துஅவன் போயபின், |
உரை
|
|
உறையுள்
குடிகை உள்வரிக் கொண்ட |
|
30
|
மறுஇல் செய்கை
மணிமே கலைதான் |
|
|
|
|
|
மாதவி மகளாய்
மன்றம் திரிதரின் |
|
|
காவலன் மகனோ
கைவிட லீயான் |
|
|
காய்பசி
யாட்டி காயசண் டிகைஎன |
|
|
ஊர்முழுது அறியும்
உருவம் கொண்டே |
|
35
|
ஆற்றா மாக்கட்கு
ஆற்றும் துணையாகி |
உரை
|
|
|
|
|
ஏற்றலும்
இடுதலும் இரப்போர் கடன்அவர் |
|
|
மேற்சென்று
அளித்தல் விழுத்தகைத்து என்றே |
|
|
நூற்பொருள்
உணர்ந்தோர் நுனித்தன ராம்என |
|
|
முதியாள்
கோட்டத்து அகவயின் இருந்த |
|
40
|
அமுத சுரபியை
அங்கையின் வாங்கிப் |
|
|
|
|
|
பதிஅகம்
திரிதரும் பைந்தொடி நங்கை |
உரை
|
|
அதிர்கழல்
வேந்தன் அடிபிழைத் தாரை |
|
|
ஒறுக்கும்
தண்டத்து உறுசிறைக் கோட்டம் |
|
|
விருப்பொடும்
புகுந்து வெய்துஉயிர்த்துப் புலம்பி |
|
45
|
ஆங்குப்
பசிஉறும் ஆர்உயிர் மாக்களை |
|
|
|
|
|
வாங்கு கையகம்
வருந்தநின்று ஊட்டலும், |
உரை
|
|
ஊட்டிய பாத்திரம்
ஒன்றுஎன வியந்து |
|
|
கோட்டம்
காவலர் கோமகன் தனக்குஇப் |
|
|
பாத்திர
தானமும் பைந்தொடி செய்தியும் |
|
50
|
யாப்புடைத்
தாக இசைத்தும்என்று ஏகி, |
உரை
|
|
|
|
|
நெடியோன்
குறள்உரு வாகி நிமிர்ந்துதன |
|
|
அடியின் படியை
அடக்கிய அந்நாள் |
|
|
நீரின்
பெய்த மூரி வார்சிலை |
|
|
மாவலி மருமான்
சீர்கெழு திருமகள் |
|
55
|
சீர்த்தி
என்னும் திருத்தகு தேவியொடு |
|
|
|
|
|
போதுஅவிழ்
பூம்பொழில் புகுந்தனன் புக்குக் |
உரை
|
|
கொம்பர்த்
தும்பி குழலிசை காட்டப் |
|
|
பொங்கர்
வண்டினம் நல்லியாழ் செய்ய |
|
|
வரிக்குயில்
பாட மாமயில் ஆடும் |
|
60
|
விரைப்பூம்
பந்தர் கண்டுஉளம் சிறந்தும், |
உரை
|
|
|
|
|
புணர்துணை
நீங்கிய பொய்கை அன்னமொடு |
|
|
மடமயில்
பேடையும் தோகையும் கூடி |
|
|
இருசிறை
விரித்துஆங்கு எழுந்துடன் கொட்பன |
|
|
ஒருசிறைக்
கண்டுஆங்கு உள்மகிழ்வு எய்தி |
|
65
|
மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் |
|
|
|
|
|
ஆடிய குரவைஇஃது
ஆம்என நோக்கியும், |
உரை
|
|
கோங்குஅலர்
சேர்ந்த மாங்கனி தன்னைப் |
|
|
பாங்குஉற
இருந்த பல்பொறி மஞ்ஞையைச |
|
|
செம்பொன்
தட்டில் தீம்பால் ஏந்திப் |
|
70
|
பைங்கிளி ஊட்டும்ஓர் பாவையாம் என்றும், |
உரை
|
|
|
|
|
அணிமலர்ப்
பூம்பொழில் அகவயின் இருந்த |
|
|
பிணவுக்குரங்கு
ஏற்றிப் பெருமதர் மழைக்கண் |
|
|
மடவோர்க்கு
இயற்றிய மாமணி ஊசல் |
|
|
கடுவன் ஊக்
குவது கண்டுநகை எய்தியும், |
உரை
|
75
|
பாசிலை
செறிந்த பசுங்கால் கழையொடு |
|
|
|
|
|
வால்வீச்
செறிந்த மராஅம் கண்டு |
|
|
நெடியோன்
முன்னொடு நின்றன னாம்எனத் |
|
|
தொடிசேர்
செங்கையில் தொழுதுநின்று ஏத்தியும |
உரை
|
|
ஆடல் கூத்தினோடு
அவிநயம் தெரிவோர் |
|
80
|
நாடகக் காப்பிய
நல்நூல் நுனிப்போர் |
|
|
|
|
|
பண்ணியாழ்
நரம்பில் பண்ணுமுறை நிறுப்போர் |
|
|
தண்ணுமைக்
கருவிக் கண்எறி தெரிவோர் |
|
|
குழலொடு
கண்டம் கொளச்சீர் நிறுப்போர் |
|
|
பழுநிய பாடல்
பலரொடு மகிழ்வோர் |
|
85
|
ஆரம் பரிந்த
முத்தம் கோப்போர் |
|
|
|
|
|
ஈரம் புலர்ந்த
சாந்தம் திமிர்வோர் |
|
|
குங்கும வருணம்
கொங்கையின் இழைப்போர் |
|
|
அஞ்செங்
கழுநீர் ஆய்இதழ் பிணிப்போர் |
|
|
நல்நெடுங்
கூந்தல் நறுவிரை குடைவோர் |
|
90
|
பொன்னின்
ஆடியின் பொருந்துபு நிற்போர் |
|
|
|
|
|
ஆங்குஅவர்
தம்மோடு அகல்இரு வானத்து |
|
|
வேந்தனிற்
சென்று விளையாட்டு அயர்ந்து, |
உரை
|
|
குருந்தும்
தளவும் திருந்துமலர்ச் செருந்தியும் |
|
|
முருகுவிரி
முல்லையும் கருவிளம் பொங்கரும் |
|
95
|
பொருந்துபு
நின்று திருந்துநகை செய்து |
|
|
|
|
|
குறுங்கால்
நகுலமும் நெடுஞ்செவி முயலும் |
|
|
பிறழ்ந்துபாய்
மானும் இறும்புஅகலா வெறியும் |
|
|
வம்மெனக்
கூஉய் மகிழ்துணை யொடுதன் |
|
|
செம்மலர்ச்
செங்கை காட்டுபு நின்று |
உரை
|
100
|
மன்னவன்
தானும் மலர்க்கணை மைந்தனும் |
|
|
|
|
|
இன்இள வேனிலும்
இளங்கால் செல்வனும் |
|
|
எந்திரக்
கிணறும் இடுங்கல் குன்றமும் |
|
|
வந்துவீழ்
அருவியும் மலர்ப்பூம் பந்தரும் |
|
|
பரப்புநீர்ப்
பொய்கையும் கரப்புநீர்க் கேணியும் |
|
105
|
ஒளித்துறை
இடங்களும் பளிக்குஅறைப் பள்ளியும் |
|
|
|
|
|
யாங்கணும்
திரிந்து தாழ்ந்துவிளை யாடி, |
உரை
|
|
மகத வினைஞரும்
மராட்டக் கம்மரும் |
|
|
அவந்திக்
கொல்லரும் யவனத் தச்சரும் |
|
|
தண்தமிழ்
வினைஞர் தம்மொடு கூடிக் |
|
110
|
கொண்டுஇனிது
இயற்றிய கண்கவர் செய்வினைப் |
|
|
|
|
|
பவளத் திரள்கால்
பன்மணிப் போதிகைத் |
|
|
தவள நித்திலத்
தாமம் தாழ்ந்த |
|
|
கோணச்
சந்தி மாண்வினை விதானத்துத் |
|
|
தமனியம்
வேய்ந்த வகைபெறு வனப்பின் |
|
115
|
பைஞ்சேறு
மெழுகாப் பசும்பொன் மண்டபத்து |
|
|
|
|
|
இந்திர
திருவன் சென்றுஇனிது ஏறலும், |
உரை
|
|
வாயிலுக்கு
இசைத்து மன்னவன் அருளால் |
|
|
சேய்நிலத்து
அன்றியும் செவ்விதின் வணங்கி |
|
|
எஞ்சா மண்நசைஇ
இகல்உளம் துரப்ப |
|
120
|
வஞ்சியின்
இருந்து வஞ்சி சூடி |
|
|
|
|
|
முறம்செவி
யானையும் தேரும் மாவும |
|
|
மறம்கெழு
நெடுவாள் வயவரும் மிடைந்த |
|
|
தலைத்தார்ச்
சேனையொடு மலைத்துத்தலை வந்தோர |
|
|
சிலைக்கயல்
நெடுங்கொடி செருவேல் தடக்கை |
|
125
|
ஆர்புனை தெரியல்
இளங்கோன் தன்னால் |
|
|
|
|
|
காரியாற்றுக்
கொண்ட காவல் வெண்குடை |
|
|
வலிகெழு
தடக்கை மாவண் கிள்ளி |
|
|
ஒளியொடு
வாழி ஊழிதோறு ஊழி |
|
|
வாழி எம்கோ
மன்னவர் பெருந்தகை |
|
130
|
கேள்இது மன்னோ
கெடுகநின் பகைஞர் |
உரை
|
|
|
|
|
யானைத்
தீநோய்க்கு அயர்ந்துமெய் வாடிஇம் |
|
|
மாநகர்த்
திரியும்ஓர் வம்ப மாதர் |
|
|
அருஞ்சிறைக்
கோட்டத்து அகவயின் புகுந்து |
|
|
பெரும்பெயர்
மன்ன நின்பெயர் வாழ்த்தி |
|
135
|
ஐயப் பாத்திரம்
ஒன்றுகொண்டு ஆங்கு |
|
|
|
|
|
மொய்கொள்
மாக்கள் மொசிக்கஊண் சுரந்தனள் |
|
|
ஊழிதோறு
ஊழி உலகம் காத்து |
|
|
வாழி எம்கோ
மன்னவ என்றலும், |
உரை
|
|
வருக வருக
மடக்கொடி தான்என்று |
|
140
|
அருள்புரி
நெஞ்சமொடு அரசன் கூறலின் |
|
|
|
|
|
வாயி லாளரின்
மடக்கொடி தான்சென்று |
|
|
ஆய்கழல்
வேந்தன் அருள்வா ழியஎனத் |
|
|
தாங்குஅருந்
தன்மைத் தவத்தோய் நீயார் |
|
|
யாங்கா
கியதுஇவ் ஏந்திய கடிஞைஎன்று |
|
145
|
அரசன் கூறலும்,
ஆயிழை யுரைக்கும் |
உரை
|
|
|
|
|
விரைத்தார்
வேந்தே நீநீடு வாழி |
|
|
விஞ்சை
மகள்யான் விழவுஅணி மூதூர |
|
|
வஞ்சம்
திரிந்தேன் வாழிய பெருந்தகை |
|
|
வானம் வாய்க்க
மண்வளம் பெருகுக |
|
150
|
தீதுஇன்
றாக கோமகற்கு ஈங்குஈது |
|
|
|
|
|
ஐயக் கடிஞை
அம்பலம் மருங்குஓர் |
|
|
தெய்வம்
தந்தது திப்பிய மாயது |
|
|
யானைத்
தீநோய் அரும்பசி கெடுத்தது |
|
|
ஊன்உடை
மாக்கட்கு உயிர்மருந்து இதுஎன, |
உரை
|
155
|
யான்செயற்
பாலதுஎன் இளங்கொடிக்கு என்று |
|
|
|
|
|
வேந்தன்
கூற மெல்இயல் உரைக்கும் |
|
|
சிறையோர்
கோட்டம் சீத்துஅருள் நெஞ்சத்து |
|
|
அறவோர்க்கு
ஆக்கும் அதுவா ழியர்என, |
உரை
|
|
அருஞ்சிறை
விட்டுஆங்கு ஆயிழை உரைத்த |
|
160
|
பெருந்தவர்
தம்மால் பெரும்பொருள் எய்தக் |
|
|
|
|
|
கறையோர்
இல்லாச் சிறையோர் கோட்டம் |
|
|
அறவோர்க்கு
ஆக்கினன் அரசுஆள் வேந்துஎன். |
உரை
|
|
|
|
|
சிறைக்கோட்டம் அறக்கோட்டம்
ஆக்கிய காதை
முற்றிற்று.
|
|
|