பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
406

    சிம்ஹம் யானைமேலே சீறினாலும் குட்டிக்கு முலை உண்ணலாம்படி இருக்குமாறு போன்று

(ப. 209)

    நித்தியசூரிகளுக்கு எல்லா விதமான போக்கியங்களும் தானேயாய் இருக்குமாறு போன்று

(ப. 210)

    வழி பறிக்கும் நிலத்திற்போவார் சீரிய தனங்களை விழுங்கி, பின்னை அமர்ந்த நிலத்திலே புக்கால் புறப்படவிட்டுப் பார்க்குமாறு போலே

(ப. 214)

    தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே

(ப. 225, 292)

    முக்கோட்டை போலேகாணும் சோலை இருப்பது

(ப. 228)

    வண்டுகளின் நினைவின்றியே அவற்றின் மிடற்றோசை பண்ணானாற்போன்று

 (ப.  229)

    ‘இங்கே நிதியுண்டு’ என்ன, அவ்விடத்தைத் தோண்டுவார்களேயன்றோ? அதைப் போன்று

(ப. 229)

    அப்படைவீட்டில் அல்லாதார் எல்லாம் பாவம் கலந்த ஜீவனம் போலேகாணும்

(ப. 234)

    ஒரு குற்றுடைவாள், நிழல் உள்ளிட்டவையைப்போன்று

(ப. 236)

    ஒருவன் சோற்றைப் பகுந்து உண்ணுமாறு போன்று

(ப. 236)

    பிராமணசாதி ஒன்றாயிருக்கவும் குலம் சரணம் கோத்திரம் முதலியவைகளால் பிரித்துச் சம்பந்திக்குமாறுபோன்று

(ப. 237)

    முத்தன் சமுசார யாத்திரையை மறக்குமாறு போன்று

(ப. 241)

    தோளும் தோள் மாலையுமான அழகைக்கண்டால் திருத்திரை நீக்கின பின்னர்ப் போலே

(ப. 250)

    காளமேகத்தில் மின்னியது போன்றிருக்கின்ற பூணுநூல்

(ப. 255)

    சிறு குழந்தைகள் நொந்தால் தாயானவள் குளிர்ந்த உபசாரம் பண்ணுமாறு போன்று  

(ப. 265)