பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
405

    நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே

(ப. 161)

    பிராட்டி பெருமாளை அணைத்தது போன்று

(ப. 164)

    இக்ஷ்வாகு வமிசத்திலே யுவநாஸ்வான் என்பான் ஒருவன் மந்திரத்தாலே சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க, அவன் வயிற்றிலே கர்ப்பமுண்டாயிற்றேயன்றோ ஒரு சத்தி விசேஷத்தாலே? அங்கு ஆணும் பெண்ணும் கலந்து பிறந்தமை இல்லையே? அது போன்று

(ப. 168)

    பூர்ண சந்திரன் நக்ஷத்திரங்களுக்குத் தலைவனாக இருத்தலைப் போன்று 

 (ப. 176)

    விளக்கை அவித்தாற்போன்று

(ப. 177)

    ‘பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும்’ என்று சொல்லுகிறபடியே, அவர்கள் செயல் இவர்கட்கு அடைவு கேடாய்த் தோன்றுமாறு போன்று   

(ப. 180)

    கருமங்களைச் செய்தாலும் அவற்றிற்கு ஒருவன் பலன் கொடுக்காத போது அவை பழுதையைப் போன்று கிடக்கும்

(ப. 185)

    காந்தி மிக்கிருந்துள்ள நீலமணி போலே சிரமத்தைப் போக்குகிற வடிவு  

 (ப. 185, 201, 272)

    தாமே விழுவாரைத் தடிகொண்டு அடித்தலைப் போன்றது

(ப. 189)

    பிராட்டி ஹிதம் அருளிச்செய்தாற்போன்று

(ப. 189, 191)

    மிகச்சிறிய முயலைப் போலே

(ப. 190)

    உபாயங்களில் பிரபத்தி மார்க்கம் போன்றது, சௌலப்யங்களில் அர்ச்சாவதார சௌலப்யம்

(ப. 193)

    வேறு பலன்களைக் கருதும் தன்மையும் நெஞ்சிலே கிடக்கச் செய்தே வேறு பலனைக் கருதாதவர்களைப்போல வந்து

(ப. 205)

    மயில் தோகை விரித்தாற்போலே

(ப. 205)

    அஞ்சனம் இட்டாற்போலே குளிர்ந்திருத்தல்

(ப. 207)

    இரணியன் துவேஷத்திற்கு விஷயமானாற்போலே

(ப. 209)