பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
404

New Page 1

    ‘கைங்கரிய ருசியுடையார் அடிமை செய்ய வாருங்கோள்’ என்றாற்போலே

 (ப. 74)

    ஆத்தும சொரூபத்தை நிரூபிக்கப் புக்கால் அத்தலையே பிடித்து இவ்வளவும் வர நிரூபிக்குமாறு போலே

(ப. 77)

    பிராதம்யத்துக்கும் பழிக்கும் செங்கல் சீரைக்கும் ஜீவனம் வைப்பாரைப் போன்று

(ப. 84)

    எல்லாவற்றுக்கும் மேல்படி அமிழ்ந்தது என்றால் கீழ்ப்படி அமிழ்ந்தது சொல்ல வேண்டாதது போன்று

(ப. 86)

    இரண்டு சொற்களைச் சேர்த்துச்சொல்ல, அது விஷத்தைப் போக்குதற்குக் காரணமாகாநின்றதே, சொற்களின் சத்தியாலே; அதைப்போன்று  

(ப. 95)

    திரு  உலகு அளந்தருளின திருவடிகளுக்கு அணுக்கன் இட்டாற்போன்று

(ப. 105)

    மாணிக்கத்தையும் வயிரத்தையும் முத்தையும் ஓர் ஆரத்திலே சேர்த்து அனுபவிப்பாரைப்போலே

(ப. 109)

    குணங்களுக்குப் பிரித்து ஸ்திதியாதல், தோன்றுதலாதல் இல்லையாமாறு போன்று

(ப. 109)

    தோளில் கிடக்கிற தோள் மாலையைப்போன்று

(ப. 112, 140)

    மஹா வாதத்திலே பலோபதானம் பண்ணுவாரைப்போன்று

(ப. 112)

    நஞ்சு உண்டாற்போன்று

(ப. 129)

    கலநெல்லை வித்தி நூறாயிரக்கலமாக விளைத்துக்கொள்ளுவாரைப் போன்று

 (ப. 129)

    இறுக்குவாதம் பற்றினாற்போலே

(ப. 157)

    மஹிஷி ஸ்வேதம் பிறரதானதைப் போன்று

(ப. 159)

    வீரராயிருப்பார் வினை முடுகினால் எதிரியுடைய ஆயுதந் தன்னைக் கொண்டு அவரை வெல்லுதலைப் போன்று

(ப. 159)

    யானையையும் சமுசாரிகளையும் காத்ததுதான் நித்தியசூரிகளைக் காத்தது போன்று

(ப. 160)

    மோம்பழம் பெற்றாற்போலே

(ப. 161)