பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
403

பெ

    பெருவிடாய்ப்பட்டவன், சேர்ந்த குளிர்ந்த தண்ணீர் அண்மையிலிருக்க, வியாதியினாலே வாய் மூடப்பட்டால், அதனைக் குடிக்க முடியாது துடிக்குமாறு போன்று

(ப. 32)

    பசியில்லாத காலத்தில் பாதகமான சோறுதானே, அது கழித்தவாறே தாரகமாக நின்றதைப் போன்று

(ப. 34)

    ஒருவன் சாதநாநுஷ்டானங்களைச் செய்து மழையைப் பெய்விக்க, உலகம் வாழ்ந்து போமாறு போன்று

(ப. 36)

    ஒவ்வொரு கால விசேடங்களிலே சிறை வெட்டி விடுமாறு போன்று

(ப. 37)

    பிராட்டி இலங்கையில் இருந்தாற்போன்று

(ப. 38)

    பறக்கின்றது ஒன்றிலே பாரம் வைத்தாற்போன்று

(ப. 42)

    சிறையிலே கிடப்பாரைப் போன்று

(ப. 45)

    ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போன்று

(ப. 47)

    யானைக்குத் தோன்றியது போலேயும் பிரஹ்லாதனுக்குத் தோன்றியது போலேயும்

(ப. 48)

    முள்ளிப் பூவில் ரசம்போலே

(ப. 51)

    எள்ளில் எண்ணெய் போலவும் மரத்தில் நெருப்புப்போலவும்

(ப. 55)

    ஒரு சானத்தைச் செய்து பலம் கைப்புகுராதார் கூப்பிடுமாறு போன்று

(ப. 56)

    அரச குமாரனையும் வேடுவனையும் ஒருங்கு பிணைத்தாற் போன்று

(ப. 63)

    பசியும் இருந்து கையிலே சோறும் உண்டாயிருக்குமவன், நீரும் நிழலும் கண்டால் உண்ணப் பாரிக்குமாறு போன்று

(ப. 68)

    உணவையே முக்கியமாகக் கொண்ட ஒருவன் ஊண் அத்தியாயம் படிக்குமாறு போன்று

(ப. 68)

    புண்ணியமானது சாலில் எடுத்த நீர் போலே குறைந்தவாறே

(ப. 71)

    போருக்குப்போவாரைப் போன்று

(ப. 73)