பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
402

வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள்

    கற்பகத்தரு பல கிளைகளாகப் பணைத்துப் பூத்தாற்போன்று

(ப. 3)

    நீரிலே நின்றாற்போன்று

(ப. 4)

    கடலுக்குள் பட்டதொரு துரும்பு ஒரு திரை ஒரு திரையிலே தள்ளக் கிடந்து அலையுமாறு போன்று

(ப. 5)

    நீரிலே நீர் கலந்தது போன்று

(ப. 6)

    கட்டில் கத்துகிறது என்பது போன்று

(ப. 8)

    இரத்தினத்தை அறியாதான் ஒருவன் ‘குருவிந்தக்கல்லோடு ஒக்கும் இது’ என்றால், அவ்வளவேயன்றோ அவனுக்கு அதனிடத்தில் மதிப்பு? அவ்வழியாலே அதற்குத் தாழ்வேயாம்; அது போன்று

(ப. 9)

    உனக்கு மகன் பிறந்தான் என்னுமாறு போன்று

(ப. 11)

    கடலிலே ஒரு மழைத்துளி விழுந்தாள் கடலை எங்கும் வியாபிக்கமாட்டாதே? அதைப் போன்று

(ப. 18)

    முசு வால் எடுத்தாற்போன்று

(ப. 20)

    படப்படச் சாணையில் இட்டாற்போன்று 

(ப. 24)

    சதுர்த்தந்தி என்னுமாறு போன்று

(ப. 24)

    மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற்போன்று அபகரிக்க

(ப. 27)

    ஒருவன் ஒரு குழமணனைச் செய்து, அதன் கழுத்திலே காக்கைப் பொன்னைத் தொற்றி, அதன் தலையிலே காலை வைத்து, ‘இது என்னை வணங்கிற்று’ என்று இறுமாந்திருக்குமாறு போன்று

(ப. 28)

    அரசன் இல்லாத தேசத்திலே அரசபுத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வட்டி விடுமாறு போன்று

(ப. 29)