பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
407

சண

    சண்டாளர் என்றால் நாம் நோக்காமல் போமாறு போன்று

(ப. 271)

    ஐஸ்வரியத்தை ஆசைப்பட்டவர்கள் தம்மோடு சஜாதீயரில் ஏற்றத்தை ஆசைப்பட்டு, க்ஷத்திரியர்க்கு மேலே ஆசைப்பட்டு, இந்திரபதத்தை ஆசைப்பட்டு, பிரஹ்மாவின் அளவில் ஆசைப்படுமாறு போன்று

(ப. 274)

    இருக்கு வேதம் போலவும் ஸ்ரீ இராமாயணம் போலவும்

(ப. 276)

    பல குழந்தைகளைப் பெற்றான் ஒருவன், க்ஷாமகாலத்தில் தன் பசிக்கு ஆற்றமாட்டாமல் அவற்றின் வாயிற்சோற்றைத் தான் பறித்து ஜீவிப்பது, தன்வாயிற்சோற்றை அவைபறித்து ஜீவிப்பதாய், ‘என்பசிக்கு என்செய்வேன்? என் குழந்தைகளின் பசிக்கு என் செய்வேன்?’ என்னுமாறு போன்று

(ப. 278)

    சிலர் பட்டினி கிடக்கச் சிலர் ஜீவிக்குமாறு போன்று

(ப. 278)

    அறிவில்லாதவர்களுக்குச் சிற்றின்பங்களில் இடையீடில்லாத பிரீதி இருப்பதைப்போன்று

(ப. 280)

    பாம்பு கண்ணாலே காண்பதும் செய்து கேட்பதும் செய்யாநின்றதைப் போன்று

(ப. 280)

    ஆறு கிண்ணகம் எடுத்தால் பல வாய்த்தலைகளாலும் போகச் செய்தேயும் கடலில் புகும்பகுதி குறைவற்றுப் போமாறு போன்று

(ப. 281)

    ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று

(ப. 284)

    ‘கல்லுங் கனைகடலும் வைகுந்தவானாடும் புல்லென்று ஒழிந்தனகொல்? ஏ பாவம்!’ என்னுமாறு போன்று

(ப. 286)

    கலியர் ‘சோறு சோறு’ என்னுமாறு போன்று

(ப. 287)

    ‘தாவி வையம் கொண்ட தடந்தாமரை’ என்னுமாறு போன்று

(ப. 289)

    ஒரு மேருவைக் கினிய காளமேகம் படிந்தாற்போலே

(ப. 289)

    ‘பசியர் வயிறார உண்ண’ என்னுமாறு போன்று

(ப. 291)

    காமிநியாய் முலை எழுந்து வைத்துக் காந்தனுடைய கைகளால் தீண்டப் பெறாததைப் போன்று

(ப. 291)