|
New Page 1
‘இராஜதாரப்
பிராவண்யம் விலக்கத்தக்கது,’ என்பது போன்று
(ப. 318)
நீங்கள் உங்களுக்கு
விருப்பமானவற்றினின்றும் மீளமாட்டாதது போன்று
(ப. 319)
பால் குடிக்கக்
கால் பிடிப்பாரைப் போன்று
(ப. 319)
கோதானத்திலே
பிதா புத்திரன் கையில் நீர் வார்த்துக் கொடுத்து, மீளவும் அவன் கொடுக்க, அவன் கையிலே தான்
பெற்றானாயிருக்குமாறு போன்று
(ப. 321)
வண்டுகள் மதுவைக்
குடித்த மயக்கத்தாலே பிரீதிக்குப் போக்குவிட்டு முரன்றது இசையாய் விழுந்தாற்போலே
(ப. 322)
வேதத்தைக் காட்டிலும்
ஸ்ரீ ராமாயணத்துக்கு உண்டான ஏற்றம் போலே
(ப. 322)
‘தென்னா தென்னா’
என்று ஆளத்தி வைப்பாரைப்போலே
(ப. 323)
தன்னைக் கிட்டாத
அன்று சமுசாரி சேதனருடைய சத்தை இல்லாதது போன்று
(ப. 323)
ஓர் ஊசி நிற்கிறதாகவும்,
அதன்மேலே ஒரு மேரு நிற்கிறதாகவும் நினைக்குமாறு போன்று
(ப. 325)
இராஜபுத்திரன்
தலையில் முடியை வைத்துப் பின்னை விலங்கு வெட்டிவிடுமாறுபோன்றும், ஸ்ரீ விபீஷணாழ்வானை முடி சூட்டிப்
பின்பு இராவணனை வதைத்தாற்போலவும்
(ப. 333)
ஞானமாகில்
அவனையே நோக்குமாறு போன்று
(ப. 340)
தாய் முலைக்கீழே
போய் ஒதுங்கும் இளங்குழவியைப்போன்று
(ப. 345)
|