6.6 தொகுப்புரை பாரதியார் முப்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்தவர்; ஆனால் தம் பலப்பல சாதனைகளால், எந்தக் காலத்து மனிதனாலும் மறக்க முடியாதவாறு வரலாற்றில் தடம் பதித்து விட்டார். இந்திய விடுதலை வரலாறு எழுதுவோர், தமிழ்க் கவிதை வரலாறு அமைப்போர், யாப்பிலக்கண வளர்ச்சி குறிப்போர், காப்பிய வார்ப்புப் பற்றி எழுதுவோர், பத்திரிகைப் புரட்சி பற்றி எண்ணுவோர், பெண்ணுலக மறுமலர்ச்சி வேண்டும் என்போர், சமூகச்சீர்திருத்தம் பற்றித் திட்டமிடுவோர் யாராயினும் பாரதியைத் தொடாமல் எழுத முடியாது. பாரதி என்றும் இறவாமல் வாழும் மனிதர்களில் ஒருவர்.
|